சென்ற ஆண்டு பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் மோசமான வானிலை காரணமாக ஆட்டங்கண்டதில் அதன் ஊழியர் ஒருவரின் வலது கணுக்காலில் எலும்பு முறிவு ஏறப்ட்டது.
SQ919 விமானத்தில் இருந்த இதர ஊழியர்கள் நால்வருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அச்சம்பவத்தின் விசாரணை முடிவுகளைப் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைக் குழு (டிஎஸ்ஐபி) அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வெளியிட்டது.
அக்குழு, போக்குவரத்து அமைச்சின்கீழ் செயல்படுகிறது.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது. அதில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும் விமானிகளால் விமானத்தை ஆட்டங்காணாமல் இருக்கச் செய்ய முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
