அமெரிக்காவின் 120 நகரங்களுக்குச் சேவை வழங்கும் எஸ்ஐஏ-சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் பங்காளித்துவம்

அமெரிக்காவின் 120 நகரங்களுக்குச் சேவை வழங்கும் எஸ்ஐஏ-சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் பங்காளித்துவம்

படம்: சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்/ஃபேஸ்புக்

10 Jun 2026 - 11:19 am

1 mins read

அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புதிய பங்காளித்துவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்மூலம் அனைத்துலகப் பயணிகள் இனி ஒரே பயணச்சீட்டின்கீழ் சாங்கி விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் ஏறத்தாழ 120 நகரங்களுக்கு மிக எளிதாகப் பயணம் செய்ய முடியும்.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவை விமானச் சேவை வழங்கும் இடங்களுக்கு இது பொருந்தும்.

பயணிகள் லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையம், சான் ஃபிரான்சிஸ்கோ அனைத்துலக விமான நிலையம், சியாட்டல் - டகோமா அனைத்துலக விமான நிலையம் ஆகிய மூன்று முக்கிய அமெரிக்க நுழைவாயில்கள் வழியாக இந்த 120 இடங்களுக்கான தடையற்ற இணைப்பைப் பெறலாம்.

இந்தப் பங்காளித்துவத் திட்டத்தின் மூலம் பயணிகள் தங்களின் முழுப் பயணத்துக்கும் ஒரே ஒரு முறை மட்டும் ‘செக்-இன்’ செய்தால் போதுமானது. அவர்களது பயணப்பெட்டிகள் அனைத்தும் அடுத்த விமானத்துக்கு மாற்றப்படும். பயணிகள் தங்களுக்கான ஒருங்கிணைந்த பயணத்திட்டங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணையப்பக்கம் அல்லது பயண முகவர்கள் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இத்தகைய பங்காளித்துவ ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் எட்டாவது அனைத்துலக விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
எஸ்ஐஏஅமெரிக்காவிமானச் சேவைபங்காளித்துவம்