படகோட்டத்தில் இளையர் இயன் கோவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

படகோட்டத்தில் இளையர் இயன் கோவுக்கு வெள்ளிப் பதக்கம்

படம்: SPEXSG/DUMRONGSAK ANGSUWORAPRUEK

03 Oct 2026 - 4:16 pm

1 mins read

காமாகோரி: ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், சிறுவர்களுக்கான ஐஎல்சிஏ 4 (ILCA 4) படகுப்போட்டியில் சிங்கப்பூரின் இயன் கோ, 16, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை.

காமாகோரி நகரின் காய்யோ படகுத் துறைமுகத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 3) நடைபெற்ற இறுதிநாள் பந்தயங்களின் முடிவில், இயன் கோ 12 பந்தயங்களில் 25 புள்ளிகள் பெற்றதையடுத்து இரண்டாம் இடம் பிடித்தார். தென் கொரியாவின் சோய் ஜூயின் தங்கப் பதக்கத்தையும், ஹாங்காங்கின் தியாகோ சல்காடோ 27 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

முன்னதாக 2023ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில், இயனின் அண்ணன் ஐசக் சாதனை படைத்திருந்தார். இயன் வென்ற பதக்கம் அவரது அண்ணனின் சாதனையைச் சமன் செய்துள்ளது.

சிங்கப்பூர்க் குழுவிற்குப் போட்டியின் இறுதிநாளான சனிக்கிழமை கிடைத்த இந்தப் பதக்கம், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகோட்டப் பிரிவில் சிங்கப்பூர் பெற்ற மூன்றாவது பதக்கமாகும்.

இதற்குமுன் வெள்ளிக்கிழமை நடந்த போட்டிகளில், ‘பாய்ஸ் 29எர்’ பிரிவில் சான் கும், நைஜல் டான் இணையரும், ஐஎல்சிஏ 6 பிரிவில் ஜானியா ஆங்கும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்படகோட்டம்சிங்கப்பூர்பதக்கம்