சிம் அட்டை மோசடி: குற்றம் நிகழ்ந்த இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு கடைக்காரர்கள்

சிம் அட்டை மோசடி: குற்றம் நிகழ்ந்த இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு கடைக்காரர்கள்

2 mins read
3fb674b3-07f1-4cba-a8b1-83c0ae514236
கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரான 49 வயது யோ கியான் டக், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உட்பட ஏழு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போலி ஆவணங்கள் மூலம் சிம் அட்டைகளைப் பதிவு செய்ததாகக் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் அறுவர், செவ்வாய்க்கிழமை (மே 26) காலை அல்ஜுனிட், கேலாங் சாலைகளில் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடங்களுக்குக் காவல் துறையினரால் நேரில் கொண்டு செல்லப்பட்டனர்.

மே 21, 22 தேதிகளுக்கு இடையில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது, 19 முதல் 49 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரர் ஒருவர், ஆறு மலேசியர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டுச் சட்டவிரோதக் கும்பல்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் வகையில், பயன்படுத்திய பிறகு கட்டணம் செலுத்தப்படும் சிம் அட்டைகளைப் பதிவு செய்து விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர்களைக் குறிவைத்து இந்த அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரான 49 வயது யோ கியான் டக் மற்றும் மலேசியர்களான 28 வயது டென்னிஸ் சுவா, 19 வயது பிரண்டன் சின், 31 வயது பூன் யிக் ஹுய், 29 வயது லாய் டக் ஷென், 26 வயது சுவீ மெங் யீ, 24 வயது ஃபான் வெங் கின் ஆகியோர், தங்களிடம் வந்த உண்மையான வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பயன்படுத்தி கூடுதல் சிம் மோசடி செய்யும் நோக்கில் அட்டைகளைப் பதிவு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட கைப்பேசி எண்கள், பிறகு ஆள்மாறாட்ட மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இவர்களில் ஃபான் வெங் கின்னைத் தவிர மற்ற ஆறு பேரும் செவ்வாய்க்கிழமை (மே 26) காலை அல்ஜுனிட், கேலாங் சாலைகளில் உள்ள கடைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்