தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு $2.8 பில்லியன் லாபம்; ஊழியர்களுக்கு 7.45 மாத போனஸ்

1 mins read
25832cf9-690a-4212-898e-275434da0783
முன்னெப்போதும் இல்லாத வகையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் $2.78 பில்லியன் நிகர லாபம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) கடந்த நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிகர லாபம் ஈட்டியதாக வியாழக்கிழமை (மே 15) தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் எஸ்ஐஏ $2.8 பில்லியன் நிகர லாபம் ஈட்டியதாகக் கூறப்பட்டது. ஒப்புநோக்க, முந்தைய நிதியாண்டில் அது $2.68 பில்லியன் லாபம் ஈட்டியது.

இதனையடுத்து, லாபத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாக, தன் ஊழியர்களுக்கு 7.45 மாத போனஸ் வழங்குவதாக எஸ்ஐஏ அறிவித்துள்ளது. சென்ற நிதியாண்டில் அவர்களுக்கு 7.94 மாத போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா, விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைப்பு இதைச் சாத்தியமாக்கியதாகக் கூறப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்த நிறுவன இணைப்பால் எஸ்ஐஏ ஒருமுறை மட்டும் பெறப்பட்ட லாபமாக ஏறத்தாழ $1.10 பில்லியனை ஈட்டியது.

இருப்பினும், அதன் செயல்பாட்டு லாபம் $1.71 பில்லியனாகக் குறைந்தது. ஓராண்டு முன்பு அது $2.73 பில்லியனாகப் பதிவானது. கடந்த நிதியாண்டின் சரிவிற்குக் கடுமையான போட்டித்தன்மை காரணமாகக் கூறப்பட்டது.

ஒரு பங்குக்கு 30 காசு லாப ஈவுத்தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு அது ஒரு பங்குக்கு 38 காசு வழங்கியது.

உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறை சவால்களை எதிர்கொள்வதாகக் கூறிய எஸ்ஐஏ, இவற்றால் வாடிக்கையாளர், வர்த்தக நம்பிக்கை பாதிக்கப்படும் என்று கூறியது. நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து தேவைக்கேற்ப விரைவாகச் செயல்பட அது உறுதிகூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்