வருவாய் பாதிப்பைத் தடுக்க சிங்கப்பூர் வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

2 mins read
dbcceae0-02a0-4178-8b22-90d13428cbe7
நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் வங்கிகள் இறங்கி உள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் அது சிங்கப்பூர் வங்கிகளின் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இருப்பினும், வங்கிகளின் லாபம் ஈட்டும் அம்சங்கள் நல்ல நிலைமையிலேயே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் குறைந்தவுடன் நிகழக்கூடிய அடிப்படைக் கோளாறுகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் வங்கிகள் இறங்கி உள்ளன.

நிலையான விகிதத்தில் உள்ள கடன் வட்டி விகிதத்தை உயர்த்துவதும் அந்த உத்திகளில் அடங்கும்.

கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஈடுசெய்யும் வகையில், நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் போடப்படும் தொகையை உயர்த்துவது மற்றோர் உத்தி.

டிபிஎஸ் வங்கி அண்மைய ஆண்டுகளில் ஏறக்குறைய $65 பில்லியன் நிலையான வட்டி விகிதச் சொத்துகளை தனது பட்டியலில் சேர்த்து இருப்பதாக அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா ஆகஸ்ட் 7ஆம் தேதி கூறினார்.

அந்தத் தொகையையும் சேர்த்து, நிலையான வட்டி விகிதச் சொத்துகளின் மதிப்பு $190 பில்லியனுக்கு உயர்ந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.

தற்போதைய நிலவரப்படி, வட்டி விகித மாற்றங்களால் வங்கியின் நிகர வட்டி வருவாயில் குறைவான தாக்கமே உணரப்படும்.

அமெரிக்க மத்திய வங்கி நிதிக்கான வட்டி விகிதத்தின் ஒவ்வோர் அடிப்படைப் புள்ளியும், நிகர வட்டி வருவாயில் $4 மில்லியன் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

2021ஆம் ஆண்டு அத்தகைய மாற்றத்தின் அளவு $18 மில்லியனுக்கும் $20 மில்லியனுக்கும் இடைப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, இவ்வாண்டு அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு இருமுறை நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஓசிபிசி வங்கியும் சில ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

குறைவான பலனைத் தரக்கூடிய தரமிக்க சொத்துகளில் முதலீடு செய்வது அதன் நடவடிக்கைகளில் ஒன்று.

அத்தகைய சொத்துகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவது ஓர் உத்தி.

அதன் காரணமாக, வட்டி விகிதம் அதிகரித்தபோதிலும் லாபத்தைக் கணக்கிடும் அளவுகோலான ‘நிகர வட்டி வருவாய்’ (என்ஐஎம்) மிதமான அளவிலேயே ஓசிபிசியில் இருந்தது.

குறிப்புச் சொற்கள்