தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரால் சில ஆண்டுகளிலேயே அணுவாற்றலைப் பெற முடியும்: ஐநா

2 mins read
45416e9c-8387-47f3-a30a-c306923d6ea4
ஜூலை 25ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய அனைத்துலக அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ குரோஸி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், எதிர்காலத்தில் அணுசக்தியைப் பயன்படுத்த விரும்பினால் ஆரம்பித்த சில ஆண்டுகளில் அதன் மூலம் எரிசக்தி வளத்தை அந்நாட்டால் பெற முடியும் என்று ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ஜூலை 25ஆம் தேதி தெரிவித்தார்.

சிறிய மாடுலர் நவீன அணுஉலைகளுக்கான தொழில்நுட்பத்தின் மூலம் அதனை எட்டும் வாய்ப்பு உள்ளதாக அனைத்துலக அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குநர் ரஃபேல் குரோஸி தெரிவித்தார்.

ஆசியானில் உள்ள வேறு ஒரு நாட்டுடன் சேர்ந்தும் சிங்கப்பூரால் ஒரு அணுவாலையை நிறுவ முடியும் என்றார் அவர்.

சிறிய மாடுலர் அணு உலைகள், சிறிய அளவில் உள்ள நவீனமான அணு உலைகளாகும். ஒரு தொழிற்சாலையில் பாகங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கிவிட முடியும். இதுபோன்ற அணு உலைகள் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் பயன்படுத்த முடியும். இவை, பாரம்பரிய பெரிய அணு உலைகளைவிட பாதுகாப்பானவை. ஆனால் இத்தகைய அணு உலைகள் இன்னமும் ஆய்வுக் கட்டத்தில் உள்ளன.

அணுசக்தி பயன்பாடு குறித்து என்ன ஆலோசனை வழங்க முடியும் என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

என்யுஎஸ்ஸில் நடைபெற்ற அணுசக்தி, அணுசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர் உரையாற்றினார்.

“அணுசக்தி தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் சிறப்பாக ஆராய்ந்து வருகிறது.என்னுடைய கண்ணோட்டத்தில் சிங்கப்பூரால் அணுவாற்றலை சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும். ஆசியான் அண்டை நாடுகளுடன் சேர்ந்தோ, ஒத்துழைப்பு மூலமாகவோ அதனை சிங்கப்பூரால் செயல்படுத்த முடியும்,” என்று திரு குரோஸி குறிப்பிட்டார்.

ஸ்லோவினியா, குரோவேஷியா இடையிலான வெற்றிகரமான கூட்டு முயற்சியால் ஸ்லோவேனியாவில் அமைக்கப்பட்ட அணுஉலையை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.

கிர்ஸ்கோ என்ற அந்த மின் உற்பத்தி நிலையம், ஸ்லோவேனியாவின் மின்சாரத் தேவையில் கால் பங்கையும் குரோவேஷியாவின் மின்சாரத் தேவையில் 16 விழுக்காட்டையும் பூர்த்தி செய்கிறது.

வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் சிங்கப்பூருக்கு வருகையளிக்கும் உயர்மட்டத் திட்டமான எஸ்.ஆர். நாதன் ஆய்வுக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக திரு. குரோஸி சிங்கப்பூர் வந்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்