சேகரிப்பாளர்களிடையே வரவேற்பு பெறும் சிங்கப்பூர் நாணயங்கள்

சேகரிப்பாளர்களிடையே வரவேற்பு பெறும் சிங்கப்பூர் நாணயங்கள்

1 mins read
b191b2c7-9b66-42f1-bcd6-811d0895c0c5
குதிரை ஆண்டை முன்னிட்டு சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட வெள்ளி நாணயம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடைகளில் 1 காசு, 5 காசு நாணயங்களுக்கான புழக்கம் குறைந்துவிட்டபோதிலும், ஏல இணையத்தளங்களில் அவற்றைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்களின் ஆர்வத்தை அவை ஈர்த்து வருகின்றன.

சான்றாக, 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அலுமினியம், வெண்கலம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்ட 5 காசு நாணயம், ‘விகாயின்ஸ்’ (VCoins) என்ற இணையத்தளத்தில் $14.82க்கு (10 யூரோ) விற்கப்படுகிறது.

அதேபோன்று, 1981ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட $10 நாணயம் கிட்டத்தட்ட $85.84 (58 யூரோ) விலைக்குக் கேட்கப்படுகிறது.

பீப்பிள்ஸ் பார்க் நிலையத்தில் பழைய நாணயங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்திவரும் திரு ஜாக்கி ஹெங், “1967 முதல் 1985 வரை தயாரிக்கப்பட்ட செம்பு-நிக்கல் (Cupro-nickel) உலோகக் கலவையாலான $1 மெர்லயன் சிங்கம் பொறிக்கப்பட்ட நாணயத்தை நிறைய வாடிகையாளர்கள் தேடி வருகின்றனர். அதன்மதிப்பைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிக விலைகொடுத்து வாங்க அவர்கள் தயாராக உள்ளனர்,” எனக் கூறினார்.

“குறிப்பாக 1978ல் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் கிட்டத்தட்ட $100 வரை விலை போகின்றன. அந்த ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நாணயங்களே அச்சிடப்பட்டன,” என்றார் திரு ஹெங்.

இவ்வாண்டு ஜனவரி முதல் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளாக அக்கடையை நடத்திவரும் 65 வயதான திரு ஹெங், இந்த ஆர்வம் சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் அனைத்துலக அளவிலும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்