சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு கூடியது

1 mins read
fc51efd7-d585-43a9-a7c1-65c7daf97e50
சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு 0.6 விழுக்காடு கூடியது. ஓர் அமெரிக்க டாலருக்கு S$1.292 என்று பதிவாகி உள்ளது. - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் சற்று தணிந்து வரும் நிலையில், திங்கட்கிழமையன்று (மே 5) ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு சற்று மேம்பட்டது.

சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு 0.6% கூடியது.

ஓர் அமெரிக்க டாலருக்கு S$1.292 என்று பதிவாகி உள்ளது.

2025ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு இதுவரை 5.3% கூடியுள்ளது.

ஆகக் கடைசியாக 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு 1.29க்கும் கூடுதல் வலுவான நிலையை எட்டியது.

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 1.3% கூடியது.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, இதுவே அது எட்டியிருக்கும் ஆக வலுவான நிலை.

தைவானிய நாணயத்தின் மதிப்பும் தென்கொரிய நாணயத்தின் மதிப்பும் முறையே 2.7%, 1.3% உயர்ந்தன. ஜப்பானிய நாணயத்தின் மதிப்பும் ஆஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பும் முறையே 0.6%, 0.5% கூடின.

உள்ளூர் நேரப்படி மாலை 5.02 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு 0.6 விழுக்காடு உயர்ந்து 1.292 ஆக இருந்தது. இது 2025ஆம் ஆண்டில் இன்றுவரை அதன் முன்னேற்றத்தை 5.3 விழுக்காடாகக் கொண்டு வந்தது. கடைசியாக சிங்கப்பூர் டாலர், 1.29 அளவை விட அதிகமாக முடிவடைந்தது செப்டம்பர் 2024ல் ஆகும்.

குறிப்புச் சொற்கள்