தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலின் போக்கு ஏற்கலாகாது: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

1 mins read
fcfee35b-0234-443d-8aa0-f808eb13cb8e
காஸாவைக் கைப்பற்றுவதற்கென்ற முழு ராணுவத் திட்டம் ஒன்றுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஒப்புதல் அளித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸாவில் ராணுவச் செயல்பாடுகளை விரிவுபடுத்த இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை தீட்டியுள்ள திட்டம், ஆபத்தான, ஏற்க முடியாத ஒன்று என்று குறிப்பிட்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, இது தொடர்பில் சிங்கப்பூர் ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தது.

இத்தகைய செயல்பாடு, பொதுமக்கள் பலர் குடிபெயரும் நிலை ஏற்பட்டு, ஏற்கெனவே கடுமையாக உள்ள மனிதாபிமான பிரச்சினையை மேலும் மோசமாக்கிவிடும் என்று வெளியுறவு அமைச்சு அறிக்கை, ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட்ட  செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

உடனடிச் சண்டை நிறுத்தத்திற்கான தன் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய சிங்கப்பூர், பிணைக்கைதிகளை உடனடியாகவும் நிபந்தனையில்லாமலும் விடுவிக்க ஹமாசைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

இஸ்ரேல் தனது அனைத்துலக மனிதாபிமான கடமைகளுக்கு உடன்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் மீதான கட்டுப்பாடுகள் அத்தனையும் அகற்றப்படவேண்டும், என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

காஸாவைக் கைப்பற்றுவதற்கென்ற முழு ராணுவத் திட்டம் ஒன்றுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஒப்புதல் அளித்தார்.

பிணைக்கைதிகள் இருப்பதாக நம்பப்படும் மக்கள்தொகை அதிகமுள்ள இடங்களுக்கு நிலப்படையினரை அனுப்ப திரு நெட்டன்யாகுவின் திட்டம் முற்படுகிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனமும் அனைத்துலக நாடுகளும் இந்த முடிவுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

காஸாவுக்குள் மனிதாபிமான உதவியை இஸ்ரேலிய அரசாங்கம் உடனடியாகவும் எந்த இடையூறு இன்றியும் அனுமதிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டது.

“நிரந்தரச் சண்டை நிறுத்தத்தை எட்டும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர சிங்கப்பூர் எல்லாத் தரப்பினரையும் ஊக்குவிக்கிறது,” என்றும் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது. 

குறிப்புச் சொற்கள்