சிங்கப்பூர் போல் எஸ்டோனியாவும் சிந்திக்கிறது: அதிபர் தர்மன்

சிங்கப்பூர் போல் எஸ்டோனியாவும் சிந்திக்கிறது: அதிபர் தர்மன்

1 mins read
06941517-8cfe-4726-ac67-1d24189795a1
எஸ்டோனிய அதிபர் அலர் காரிஸ் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் புவியியல் ரீதியாக பல கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்தாலும் இருநாடுகளுக்கும் இடையில் ஒரேமாதிரியான சிந்தனைகள் உள்ளன என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.

எஸ்டோனிய அதிபர் அலர் காரிஸ் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார் அதிபர் தர்மன். அப்போது அந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் போல் எஸ்டோனியாவும் சிந்திக்கிறது. இருநாடுகளும் சிறிய நாடுகள், வெளிப்படையான நாடுகள். குடிமக்களுக்கு கல்வி, புத்தாக்கம் தொடர்பாக அனைத்து வாய்ப்புகளையும் தருகின்றன,” என்று அதிபர் தர்மன் கூறினார்.

உலக நாடுகளுடன் இணைந்து பொது நலன் கருதி உழைப்பதிலும் இரு நாடுகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் உலக அமைப்புகளின் சட்டங்களை இருநாடுகளும் மதித்து நடப்பதாகவும் தர்மன் குறிப்பிட்டார்

திரு தர்மன் இரண்டு நாள் பயணமாக எஸ்டோனியா சென்றுள்ளார். எஸ்டோனியா செல்லும் முதல் சிங்கப்பூர் அதிபர் திரு தர்மன்.

எஸ்டோனிய செல்வதற்கு முன்னர் திரு தர்மன் இத்தாலி சென்றிருந்தார். அங்கு இத்தாலிய அதிபர் மற்றும் பிரதமரை அவர் சந்தித்தார். இந்த அதிகாரத்துவ பயணத்தில் பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப்பிடமும் அதிபர் தர்மன் பேசினார்.

அதிபர் தர்மன் வியாழக்கிழமை (ஜூன் 27) நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்