சிங்கப்பூர் உற்பத்தித்துறையின் வளர்ச்சி, இரண்டாவது மாதமாகத் தொடர்ந்து மே மாதத்தில் மெதுவடைந்துள்ளது.
எனினும், ப்ளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்த 2.2 விழுக்காடு வளர்ச்சியைவிட அது அதிகம்.
தொழிற்சாலை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் திருத்தப்பட்ட 5.6 விழுக்காடு உயர்வுக்குப் பிறகு, ஆண்டு அடிப்படையில் 3.9 விழுக்காடு உயர்ந்தது. பின்னர் மார்ச் மாதத்தின் 6.9 விழுக்காடு விரிவாக்கத்திலிருந்து மந்தமானது.
அதிக ஏற்ற இறக்கமுள்ள உயிரியல் மருத்துவத் துறை தவிர்த்து, தொழிற்சாலை உற்பத்தி 4.9 விழுக்காடு அதிகரித்ததாக, வியாழக்கிழமை (ஜூன் 26) பொருளியல் வளர்ச்சிக் கழக அறிக்கை தெரிவித்தது.
மாத அடிப்படையில் உற்பத்தி குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் 0.4 விழுக்காடு சரிந்தது.
முக்கிய மின்னணு துறையில், உற்பத்தி மே மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 3.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது, இது ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட 14.6 விழுக்காடு வளர்ச்சியுடன் ஒப்பிட பெருமளவு குறைவு.
இத்துறையில், குறைகடத்தித்துறை உற்பத்தி 3.4 விழுக்காடு உயர்ந்தது, எனினும் இது ஏப்ரல் மாதத்தின் 11.1 விழுக்காடு அதிகரிப்பைவிட குறைவு. தகவல் தொடர்பு, நுகர்வோர் மின்னணு பிரிவுத்துறைகள், முந்தைய மாதத்தின் 67.4 விழுக்காடுவளர்ச்சியிலிருந்து குறைந்து, 42.6 விழுக்காடுவளர்ச்சியை எட்டியது.
கணினிச் சாதனங்கள், தரவு சேமிப்புப் பிரிவின் உற்பத்தி 18.7 விழுக்காட்டுடன் சுருங்கியது. ஏனைய மின்னணு துறைகளின் உற்பத்தி 20.8 விழுக்காடாகக் குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
உயிரியல் மருத்துவத்துறை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் மே மாதத்தில் 6.1 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது, இது ஏப்ரல் மாதத்தில் 1.8 விழுக்காடு சுருங்கியது.
போக்குவரத்துப் பொறியியல் (25.6 விழுக்காடு), துல்லியப் பொறியியல் (10.3 விழுக்காடு), உயிரியல் மருத்துவத்துறை (6.1 விழுக்காடு), ரசாயனங்கள் (0.3 விழுக்காடு) ஆகிய துறைகளும் வளர்ச்சியைப் பதிவுசெய்தன.
போக்குவரத்து பொறியியலில், விண்வெளிப் பிரிவு 43.6 விழுக்காடு வளர்ந்தது, விமான உதிரிப்பாகங்களின் அதிக உற்பத்தியாலும் வணிக விமான நிறுவனங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்புத் தேவைகள் அதிகரிப்பாலும் இத்துறை வளர்ச்சி கண்டது. கப்பல் கட்டுமானத் தளங்களில் அதிக அளவிலான நடவடிக்கைகள் காரணமாக, கடல் துறை, கடல் பொறியியல் பிரிவு 5.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது. மாறாக, நிலப்பிரிவு 12 விழுக்காடு சரிந்தது.
மற்ற அனைத்து உற்பத்தித் தொழில்களும், மே மாதத்தில் ஆண்டு அடிப்படையில் வளர்ச்சியைக் கண்டன.
பெரும்பாலான பிரிவுகள் உற்பத்தி சரிவைப் பதிவு செய்ததால், பொதுவான உற்பத்தி 8.9 விழுக்காடு குறைந்தது. அச்சுப் பிரிவு 2.2 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில், உணவு, பானம், புகையிலை பிரிவு 4.5 விழுக்காடு சுருங்கியது. பல்வேறு தொழில்கள் பிரிவும் 16.6 விழுக்காடு சுருங்கியது.

