சிங்கப்பூர் ராட்டினம்: செப்டம்பர் 13 மீண்டும் இயங்கும்

1 mins read
b04e407f-62bd-4958-a4e4-a7b764500718
தொழில்நுட்பப் பிரச்சினை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ராட்டினம் செப்டம்பர் 10ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

சிங்கப்பூர் ராட்டினம் மீண்டும் சனிக்கிழமை (செப்டம்பர் 13) செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராட்டினத்தில் தொழில்நுட்பப் பிரச்சினை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதன் இயக்கம் புதன்கிழமை (செப்டம்பர் 10) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சிங்கப்பூர் ராட்டினக் குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி முழுமையான சோதனைகளையும் பழுதுபார்ப்புப் பணிகளையும் நிறைவுசெய்தனர். வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வெளியிடப்பட்ட அறிக்கையில் ராட்டினத்தின் பேச்சாளர் அந்த விவரங்களை வெளியிட்டார்.

தற்காலிக நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டோர், தங்களது வருகைத் தேதியை வேறொரு நாளுக்கு மாற்றிக்கொள்வதற்காகத் தொடர்புகொள்ளப்படுவதாய்ப் பேச்சாளர் சொன்னார்.

சிங்கப்பூர் ராட்டினத்தின் இணையத்தளத்திலும் சமூக ஊடகங்களிலும் அண்மைத் தகவல்களை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பெறலாம்.

குறிப்புச் சொற்கள்