சிங்கப்பூரில் திறந்த விசிறி இயந்திரங்களைச் சோதிக்கும் முதல் விமான நிலைய சோதனை மையம்

சிங்கப்பூர், அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து அமைக்கின்றன.

சிங்கப்பூரில் திறந்த விசிறி இயந்திரங்களைச் சோதிக்கும் முதல் விமான நிலைய சோதனை மையம்

2 mins read
952aec48-ccaa-40fc-9461-3e37723aee02
புதிய ஒப்பந்தம், சிங்கப்பூர் விமானப் போக்குவரத்தில் திறந்த-விசிறியுடனான அடுத்த தலைமுறை இயந்திரங்களை இணைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திறந்த விசிறி கொண்ட அடுத்த தலைமுறை விமான இயந்திரங்களைப் பரிசோதிப்பதற்கான உலகின் முதல் விமான நிலைய சோதனை மையம் சிங்கப்பூரில் அமைய உள்ளது.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) பல்வேறு பங்காளிகளுடன் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) கையெழுத்திட்ட எட்டு ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று.

சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மூன்றாவது சாங்கி விமானத் தொழில்துறை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்த விமான நிலைய சோதனை மையத்துக்கான ஒப்பந்தம், சிங்கப்பூர் விமானப் போக்குவரத்தில் திறந்த-விசிறியுடனான அடுத்த தலைமுறை இயந்திரங்களை இணைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிஏஏஎஸ், பிரெஞ்சு-அமெரிக்க விமான இயந்திர உற்பத்தி நிறுவனமான சிஎஃப்எம் இன்டர்நேஷனல், ஏர்பஸ் ஆகியவை இணைந்து சிஎஃப்எம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை நிலைத்தன்மை வாய்ந்த இயந்திரங்களுக்கான அந்த விமான நிலைய பரிசோதனை மையத்தை அமைக்கும்.

தற்போது பயன்படுத்தப்படும் மூடிய விசிறி கொண்ட இயந்திரங்களைவிட திறந்த விசிறி கொண்ட இயந்திரங்கள் நீளமானவை. திறத்துடனும் செயல்படும். 20 விழுக்காட்டுக்கும் அதிகமான எரிபொருளைச் சேமிக்கும். மேலும் கரிம வெளியீடும், ஒலி அளவும் குறைந்திருக்கும்.

மற்றோர் ஒப்பந்தம், ஐக்கிய நாடுகளின் விமானப் போக்குவரத்து நிறுவனமான அனைத்துலகப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO), சிஏஏஎஸ்-இன் பயிற்சிப் பிரிவான சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துப் பயிற்சிக் கழகம் ஆகியவற்றிற்கிடையே ஏற்படுத்தப்பட்ட புதிய பயிற்சித் திட்டம்.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர்களுக்கான அப்பயிற்சித் திட்டம், ஆகாயப் போக்குவரத்துச் சேவை ஆற்றல்களை உருவாக்குவதுடன் நவீனமயமாக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பதற்கான தளத்தையும் வழங்கும்.

அந்தத் திட்டம் கோலாலம்பூரில் செப்டம்பர் 11 முதல் 12 வரை இடம்பெறும்.

ஒன்பது நிறுவனங்களுடன் நீடித்த நிலைத்தன்மைமிக்க விமானப் போக்குவரத்து எரிபொருள் கொள்முதலைச் சோதித்தல்; பொருளியல் வளர்ச்சிக் கழகம், ‘ஜிஇ’ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறை விமானத் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்; பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் இதர விமானப் போக்குவரத்து பங்காளிகளின் முழு நிதி உதவியுடன் பசிபிக் தீவு நாடுகளுக்கான மேல்நிலை முதுநிலைப் படிப்பு உள்ளிட்டவை எட்டு ஒப்பந்தங்களில் அடங்கும்.

வடக்கு மேசிடோனியா, ஐரோப்பிய வட்டாரத்தைச் சேர்ந்த சிவில் விமானப் போக்குவரத்து நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் வடக்கு மேசிடோனியாவுடன் இணைந்து சிஏஏஎஸ் வழங்குவது மற்றொரு ஒப்பந்தம்.

மேலும், சாங்கி விமான நடுவத்தின் (ஏர் ஹப்) செயல்திறன், உற்பத்தித்திறன்களை மேம்படுத்தும் வகையில் வான் வழிச் சேவை திறன் மேம்பாடு மற்றும் பாவனைப் பயிற்சிகளுக்கான பெரிய இயற்பியல் நிறுவன மாதிரி உருவாக்கம் ஆகிய இரு ஒப்பந்தங்கள் ஜனவரி 29 அன்று கையெழுத்தானதாக சிஏஏஎஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்