நிலைவட்டிக் கடன்களையே விரும்பும் சிங்கப்பூர் வீட்டு உரிமையாளர்கள்

நிலைவட்டிக் கடன்களையே விரும்பும் சிங்கப்பூர் வீட்டு உரிமையாளர்கள்

2 mins read
613bcaee-6afb-41dd-b2ba-595c774e1032
மாறுபடும் வட்டி விகிதங்களோடு ஒப்பிடுகையில் நிலைவட்டி விகிதங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாறுபடும் வட்டி விகிதங்கள் (Floating rate) குறைவாகக் காணப்பட்டாலும் சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் நிலைவட்டி (Fixed rate) அடைமானக் கடன்களையே விரும்புகிறார்கள்.

மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில். மாறுபடும் வட்டி விகிதங்களோடு ஒப்பிடுகையில் நிலைவட்டி விகிதம் உயர்வு கண்டாலும் அவர்கள் தங்கள் தெரிவுகளில் உறுதியாக உள்ளனர்.

தற்போதைய சந்தையின் நிச்சயமற்ற போக்குக்கு மத்தியில் மன அமைதியைப் பாதிக்காத கடன், வருங்கால வட்டி விகித உயர்வுக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது போன்றவை அவர்களின் அந்த முடிவுக்குக் காரணங்களாக இருக்கலாம் என்று வங்கித் துறை நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினர்.

இருப்பினும், எல்லாரும் அந்த முடிவில் இருப்பதில்லை. ஒருசில வீட்டு உரிமையாளர்கள் மாறுபடும் வட்டி விகிதக் கடன் திட்டங்களுக்கு மாறி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றம் காணும் வட்டி விகிதங்களைக் கொண்ட கடன் திட்டங்கள் பொதுவாக மூன்று மாதக் கூட்டு வட்டியான ‘சோரா’வுடன் (Sora) இணைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு விலை நிர்ணயம் செய்ய இதனைப் பயன்படுத்துகின்றன.

உலகளாவிய வட்டி விகித எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேவேளை, மத்திய கிழக்குப் பதற்றங்களின் பணவீக்கத் தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை மெதுவாகவே குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நிலைவட்டி விகிதங்கள் விலை கூடியவையாக மாறியுள்ளன.

சிங்கப்பூரில் வட்டி விகிதங்கள் பெரும்பாலும் உலகளாவிய முறைகளையே பின்பற்றுகின்றன. உலக நாடுகளில் வட்டி விகிதங்கள் உயரக்கூடிய நிலையில், சிங்கப்பூர் விகிதங்களும் உயரவேண்டும். இல்லையெனில் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு வலுவிழந்துவிடும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்