தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆடம்பரப் பொருள்களுக்கு அதிக செலவு: முதலிரு இடங்களில் சிங்கப்பூர், ஹாங்காங்

2 mins read
e2094901-c1ef-4a0c-be7e-4978d12ea896
சிங்கப்பூர், அரசியல், பொருளியல் நிலைத்தன்மைக்குத் தனக்குள்ள நற்பெயரைக் கட்டிக்காத்து வருவதால், அது தொடர்ந்து பெரும் செல்வந்தர்களை ஈர்க்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, உணவருந்துதல் உள்ளிட்ட சேவைகளுக்கும், நகைகள், காலணிகள் போன்ற ஆடம்பரப் பொருள்களுக்கும் உலகிலேயே செலவுமிக்க நகரமாக சிங்கப்பூர் தொடர்ந்து நீடிக்கிறது.

ஹாங்காங் இரண்டாம் நிலைக்கும், லண்டன் மூன்றாம் நிலைக்கும் முன்னேறின.

சுவிட்சர்லாந்தின் ‘ஜூலியஸ் பெர்’ குழுமம் வெளியிட்ட வருடாந்தர அறிக்கை அதனைத் தெரிவித்தது.

சிங்கப்பூர், அரசியல், பொருளியல் நிலைத்தன்மைக்குத் தனக்குள்ள நற்பெயரைக் கட்டிக்காத்து வந்துள்ளதால் அது தொடர்ந்து பெரும் செல்வந்தர்களை ஈர்க்கிறது.

வழக்கறிஞரை நாடுவதற்கான ஆக விலை உயர்ந்த நகரம் ஹாங்காங். சொத்துகளை வாங்குவதன் தொடர்பில் அது இரண்டாம் இடத்தில் உள்ளது.

லண்டன் முன்னேறியதற்கு, பிரிட்டிஷ் பவுண்ட் வலுப்பெற்றது ஒரு காரணம்.

இதற்கிடையே, சொத்துச் சந்தையில் ஏற்பட்ட சவால்களாலும் பயனீட்டாளர் நம்பிக்கை குறைந்ததாலும் ஷாங்ஹாய் பட்டியலில் நான்காம் இடத்திற்கு இறங்கியுள்ளது.

வலுவிழந்துவரும் ‘யென்’ நாணயத்தால், தோக்கியோ 23ஆவது இடத்திற்கு இறங்கியது. அமெரிக்க டாலரைப் பொறுத்தவரை, தோக்கியோவைக் காட்டிலும் சிலியில் உள்ள சாண்டியாகோ மேலும் விலை உயர்ந்த நகரமாக உருவெடுத்துள்ளதாக அறிக்கை கூறியது.

ஒரு காலத்தில் இந்த நிலையை நினைத்துக்கூட பார்த்திருக்கமுடியாது என்று அது சுட்டியது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து ஃபிராங்க் நாணயம் வலுப்பெற்றதால் ஸூரிக், பட்டியலில் ஆறாம் இடத்திற்கு முன்னேறியது.

குடியிருப்புச் சொத்து, கார்கள், வர்த்தகப் பிரிவு உள்ள விமானச் சேவைகள், பள்ளிகள் போன்றவற்றின் அடிப்படையில், உலகின் ஆக விலை உயர்ந்த நகரங்களை ‘ஜூலியஸ் பெர்’ னின் வாழ்க்கைமுறை குறியீடு தரவரிசைப்படுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்