இயந்திர மனிதக் கருவிகளை உருவாக்க சிங்கப்பூர் முக்கியத் தளம்: குளோபல்ஃபெளண்டரிஸ்

இயந்திர மனிதக் கருவிகளை உருவாக்க சிங்கப்பூர் முக்கியத் தளம்: குளோபல்ஃபெளண்டரிஸ்

2 mins read
72ddfec5-ef81-4c09-ab11-eb6d312368dd
சிங்கப்பூரில் உள்ள பகுதி மின்கடத்தி ஆலையை நிர்வகிக்க போஸ்டன் டைனமிக் இயந்திரக் கருவி கைகொடுக்கிறது. - படம்: குளோபல்ஃபெளண்டிரிஸ் சிங்கப்பூர்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கைப்பேசி, கணினித் திரைகளைத் தாண்டி இயந்திர மனிதக் கருவிகளாக உருமாறிவருவதால் சில்லுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றுக்கான வன்பொருள்மீது கூடுதல் கவனம் செலுத்திவருகின்றன.

இயந்திர மனிதக் கருவிகள் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உற்பத்தி செய்யப்படக்கூடும். அத்தகைய கருவிகள் உண்மையான சூழலில் செயல்பட உகந்த பகுதி மின்கடத்தித் தளங்கள் தேவை.

அந்த வகையில், சிங்கப்பூரில் ஆகப் பெரிய உற்பத்தி நிறுவனத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவின் குளோபல்ஃபெளண்டரிஸ் நிறுவனம், இயந்திர மனிதக் கருவிகளுக்குத் தேவையான ஆற்றல் நிறைந்த, ஒருங்கிணைந்த சில்லுகளையும் கருவிகளையும் தயாரிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தது.

இயந்திர மனிதக் கருவிகளையும் அதுதொடர்பான பகுதி மின்கடத்தித் தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதில் குளோபல்ஃபெளண்டரிஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக முயன்றுவருவதாக அந்நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி கிரேக் பார்ட்லெட் கூறினார்.

நிறுவனத்தின் தொழில்நுட்ப, உற்பத்தி ஆற்றலைப் பெருக்க அட்வான்ஸ்டு மைக்ரோ ஃபெளண்டரி என்ற சிங்கப்பூர் நிறுவனத்தையும் குளோபல்ஃபெளண்டரிஸ் வாங்கியுள்ளது.

அத்தகைய மதிநுட்பச் சொத்துகளில் சரியான நேரத்தில் முதலீடு செய்ததாகத் திரு பார்ட்லெட், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டார்.

அது நம்பகமான மின்கடத்தி உற்பத்தியாளராகவும் புத்தாக்க நடுவமாகவும் சிங்கப்பூரை முன்னிறுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தானியக்க வாகனங்கள், ஆளில்லா வானூர்திகள், இயந்திர மனிதக் கருவிகள் என செயற்கை நுண்ணறிவு யதார்த்த வாழ்க்கையில் ஏறகெனவே காணப்படுவதாகக் கூறிய அவர், தொழிற்சாலைகள், கட்டுமானத் தளங்கள், வீடுகள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் பயன்பாடு வெகுதொலைவில் இல்லை என்றார்.

மக்களிடமிருந்து நேரடியாகக் கற்று, வார்த்தைகளை ஒரு செயலாக மாற்றி உண்மையான மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ப மாறக்கூடிய இயந்திர மனிதக் கருவிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா நம்புகிறது.

கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட இயந்திர மனிதக் கருவிகளின் எண்ணிக்கை 20,000. 2035ஆம் ஆண்டுக்குள் அது 10 மில்லியனை எட்டக்கூடும் என்று அது கருகிறது.

2060ஆம் ஆண்டுக்குள் அவற்றின் செயல்பாடு மூன்று பில்லியனைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
இயந்திர மனிதன்செயற்கை நுண்ணறிவுமுதலீடு