மறைந்த போப் பிரான்சிஸுக்குச் சிங்கப்பூர்த் தலைவர்கள் இரங்கல்

1 mins read
c9b84549-6f3e-425c-a6c6-35216f027b55
போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானார். - படம்: ஏஎஃப்பி

போப் பிரான்சிஸின் மறைவை அடுத்து சிங்கப்பூர்த் தலைவர்கள் போப்பின் வெளியுறவு செயலாளர் கார்டினல் பியெட்ரோ பெரொலினுக்கு இரங்கல் கடிதங்களைச் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 22) அனுப்பியுள்ளனர்.

உலகில் உள்ள 1.4 பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, ஏப்ரல் 21ஆம் தேதி ரோமில் இயற்கை எய்தினார்.

அமைதியையும் சமய நல்லிணக்கத்தையும் முன்னிறுத்திய போப் பிரான்சிஸ், பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான முயற்சிகளை ஆதரித்தவர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறினார்.

“போப் பிரான்சிஸ் கலக்கம் நிறைந்த உலகத்திற்கான ஒரு தலைவர்,” என்று அதிபர் தர்மன் புகழாரம் சூட்டினார்.

அவரது தாழ்மைக்காகவும் எளியவர்களுடன் பயணம் செய்து ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் மதித்தவராகவும் போப் பிரான்சிஸ் இருந்ததாக அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.

பிரதமர் லாரன்ஸ் வோங், 2013ஆம் ஆண்டு தொடங்கிய போப் பிரான்சிஸின் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூருக்கும் வத்திகனுக்கும் இடையிலான உறவு வலுப்பட்டதாகச் சொன்னார்.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று நாள்களுக்குச் சிங்கப்பூர் வந்த போப் சிங்கப்பூரர்களின் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்ததோடு பல சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவுப் பாலத்தை உருவாக்க முனைந்தவர் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்