தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்கு வெளியீட்டுச் சந்தைப் பட்டியலில் லண்டனைப் பின்னுக்குத் தள்ளிய சிங்கப்பூர்

1 mins read
d90941af-af3f-44ca-bd3b-62499f976ffa
சிங்கப்பூர் பட்டியலில் ஒன்பதாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பங்கு வெளியீட்டில் உலகளவில் முன்னிலை வகிக்கும் 20 சந்தைகளின் பட்டியலில் சிங்கப்பூர் லண்டனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

தனியார் நிறுவனமொன்று முதன்முறையாகத் தன் பங்குகளைப் பொது வர்த்தகத்திற்கு அறிவிக்கும் நடைமுறை, முதல் பொதுப்பங்கு வெளியீடு (Initial Public Offering/IPO) எனப்படும்.

மூன்றாம் காலாண்டு முடிவடைந்துள்ள நிலையில், சிங்கப்பூரும் மெக்சிகோவும் உலக நிதி நடுவமாகப் பெயர்பெற்றுள்ள லண்டனைப் பின்னுக்குத் தள்ளிய தகவல் வெளிவந்துள்ளது.

புளூம்பெர்க் பட்டியலில் பிரிட்டிஷ் பங்குச் சந்தை மூன்று நிலைகள் கீழிறங்கி 23வது இடத்தில் உள்ளது.

மற்ற சந்தைகளின் நிலை ஏறுமுகமாகப் பதிவாகியுள்ளது.

பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் முதல் பொதுப்பங்கு வெளியீடு மூலம் 1.44 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியது.

19ஆம் இடத்தில் உள்ள மெக்சிகோ ‘ஐபிஓ’ மூலம் 460 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியுள்ளது.

இது லண்டன் ஈட்டியதைவிட கிட்டத்தட்ட இருமடங்காகும்.

லண்டனில் இந்த ஆண்டு ஆகப் பெரிதாக இடம்பெற்ற முதல் பொதுப்பங்கு வெளியீடு, 98 மில்லியன் பவுண்டு (S$170 மில்லியன்) ஈட்டியது.

பல நூற்றாண்டுகளாக அனைத்துலக நிதி நடுவமாகக் கருதப்பட்ட லண்டனின் நிலை, இதர ஐரோப்பிய நாடுகள், ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் புதிதாக உருவெடுக்கும் நிதி நடுவங்கள் ஆகியவற்றின் போட்டித்தன்மையால் ஆட்டங்கண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்