சிங்கப்பூர்க் காவல்துறை, சமூகத்தின் தயார்நிலையை உயர்த்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சமூகப் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
நவம்பர் 9 அன்று புக்கிட் [Ϟ]தீமா தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதை அடுத்து, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு இணைப் பேராசிரியர் ஃபைஷல் இவ்வாறு பதிலளித்தார்.
சிங்கப்பூர்க் காவல்துறை தனது தரை நடவடிக்கை பயிற்சிகள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் மூலம் பங்காளிகளை ஈடுபடுத்துகிறது என்று நவம்பர் 18 அன்று இதுபோன்ற ஒரு பயிற்சியின் முடிவில் பேராசிரியர் ஃபைஷல் கூறினார்.
சுவா சூ காங்கில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மேற்குக் கல்லூரியில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அவசரகால ஆயத்தப் பயிற்சியான ‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட்’ நடைபெற்றது.
சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், பாகமேற்று நடித்தவர்கள், ஐடிஇ மேற்குக் கல்லூரியின் மாணவத் தொண்டூழியர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
2015ஆம் ஆண்டு முதல் உள்துறைக் குழுவால் சமூகத்தில் பாதுகாப்பு தொடர்பான பல பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் ‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட்’ பயிற்சி இடம்பெற்று வருகிறது.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இடம்பெற்ற பயிற்சி[Ϟ]யானது, கார் நிறுத்துமிடத்தின் மின்தூக்கி அருகே கைவிடப்பட்ட பையை ஒரு பாதுகாவல் அதிகாரி கண்டறிவதில் இருந்து தொடங்கியது. உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் போடப்பட்டது.
மாணவர்கள் அங்கிருந்து ஒதுங்கி இருக்குமாறு ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கிடமான பையை எடுத்து மாணவர்களை நோக்கி ஓடினார். பின்னர் அந்தப் பையில் உள்ள வெடிபொருள்களை வெடிக்கச் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
‘வெடிகுண்டு’ வெடித்த இடத்தில் புகை நிரம்பியதால் கார் நிறுத்துமிடத்தில் குழப்பம் நிலவியது. தரையில், காயம்பட்ட மாணவர்கள் வலியால் கதறி அழுவதைப் போல நடித்தனர்.
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட்’ பயிற்சியில் இம்முறை, ஜூரோங் காவல்துறை பிரிவும் ஐடிஇ மேற்குக் கல்லூரியும் இணைந்து பள்ளி வளாகத்திற்குள் ஒரு பாவனைப் பயிற்சியை நடத்தின. நமது இளையர்கள் பயங்கர[Ϟ]வாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். அத்தகைய சம்பவம் நிகழும்போது அவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பு பற்றி அவர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்று பேராசிரியர் ஃபைஷல் தெரிவித்தார்.
“பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் அனைவருக்கும் பங்குண்டு,” என்று அவர் மேலும் கூறினார்.
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட்’ பாதுகாப்புப் பயிற்சி, இதற்குமுன் ஹோட்டல்கள், வாழ்க்கைப்பாணி நடுவம், கடைத்தொகுதி ஆகியவற்றில் நடத்தப்பட்டு உள்ளன.

