உலகிலேயே 4வது ஊழல் குறைந்த நாடு சிங்கப்பூர்

உலகிலேயே 4வது ஊழல் குறைந்த நாடு சிங்கப்பூர்

1 mins read
462538b0-bffc-4ce8-b995-7dcdd7e2a039
ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலகிலேயே பொதுத் துறையில் ஊழல் குறைந்துள்ள நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆசிய அளவில் சிங்கப்பூர் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா?

சுவிட்சர்லாந்தும் சுவீடனும் சிங்கப்பூருடன் சேர்ந்து 4வது இடத்தைப் பிடித்துள்ளன.

ஊழலைக் கண்காணிக்கும் அனைத்துலக அமைப்பான டிரான்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட ஊழல் குறைந்த நாடுகளின் வரிசையில் மூன்று நாடுகளும் 85 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.

இதனால் ஆசியாவிலேயே ஊழலற்ற நாடாக சிங்கப்பூர் பெயர் பெற்று உள்ளது.

டென்மார்க்கும் நியூசிலாந்தும் 87 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளன.

ஃபின்லாந்து 86 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

பெர்லினை தலைமையக மாகக் ெகாண்டு செயல்படும் அந்த அமைப்பு, ஊழலுக்கு எதிராக பெரும்பாலான நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டது.

180 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50க்கும் குறைவான இடத்தில் உள்ளன.

அமெரிக்கா 69 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

#தமிழ்முரசு #ஊழல் #சிங்கப்பூர்முதலிடம் #சிங்கப்பூர்நான்காமிடம்

குறிப்புச் சொற்கள்