30,000 குடும்பங்களுக்குச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இளையர் பிரிவு உதவி

30,000 குடும்பங்களுக்குச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இளையர் பிரிவு உதவி

1 mins read
ca1376f4-afcc-4a67-a82b-463ff6ed0f35
இரண்டு வார இறுதிகளில் இந்த அத்தியாவசியப் பொருகள் பொட்டலம் கட்டப்பட்டு விநியோகம் செய்யட்டன. இப்பணியில் மொத்தம் 570 தொண்டூழியர்கள் ஈடுபட்டனர். - படம்: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இளையர் பிரிவின் புராஜெக்ட் ரைஸ்+’ திட்டத்தின்கீழ், சுமார் 30,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய வீட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

நலிவுற்ற சமூகத்தினருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் ஏறத்தாழ $700,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த வருமானக் குடும்பங்கள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், தனியாக வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோர் பயனடைந்துள்ளனர்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பல்வேறு திட்டங்கள், குடும்பச் சேவை நிலையங்கள், குடியிருப்பாளர் மையங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தத் தகுதியுடைய குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன.

ஆண்டுதோறும் இளையர்களால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின்கீழ், மொத்தம் 46,238 அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன. 10 உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 29 இளம் தலைவர்கள் இத்திட்டத்துக்குத் தலைமை தாங்கியதோடு, நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 300 இளையர்கள் இதில் பங்கெடுத்தனர்.

இரண்டு வார இறுதிகளில் இந்த அத்தியாவசியப் பொருள்கள் பொட்டலம் கட்டப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. இப்பணியில் மொத்தம் 570 தொண்டூழியர்கள் ஈடுபட்டனர். இத்தகைய சமூகச் சேவைகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாகியும் தலைமைச் செயலாளருமான பெஞ்சமின் வில்லியம் தெரிவித்தார்.

இச்சேவை, சிங்கப்பூரில் நலிவுற்ற சமூகத்தினர் எதிர்கொள்ளும் யதார்த்த நிலையை தமது செஞ்சிலுவைச் சங்க இளையர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவுவதோடு, அவர்களிடம் பிறர்மீது பரிவுகொள்ளும் பண்பையும் மனிதநேயச் சேவைகளில் வாழ்நாள் ஈடுபாட்டையும் வளர்க்கிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்