தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் முதலிடத்தைத் தக்கவைத்த சிங்கப்பூர்

1 mins read
0d364bef-52dc-4908-81c6-3d2895fce714
சிங்கப்பூர்க் கடப்பிதழ் வைத்திருப்போர் 195 நாடுகளுக்கு விசாவின்றிச் செல்ல முடியும். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் சிங்கப்பூர்க் கடப்பிதழ் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சிங்கப்பூர்க் கடப்பிதழைக் கொண்டு விசா இல்லாமல் 195 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

ஹென்லி கடப்பிதழ் குறியீட்டைக் கொண்டு ‘சிஎன்என் டிராவல்’ வெளியிட்டுள்ள அண்மைய காலாண்டுத் தரவரிசைப் பட்டியலில், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் அனுமதியுடன் ஜப்பானும் சீனாவும் இரண்டாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடப்பிதழைக் கொண்டுள்ளோர் 192 நாடுகளுக்கு விசாவின்றிப் பயணம் மேற்கொள்ளலாம்.

மலேசியக் கடப்பிதழ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தரவரிசையில் 12ஆம் இடத்தைத் தக்கவைத்துள்ளது. மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்போர் 183 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை.

இந்தியக் கடப்பிதழ் 80ஆம் இடத்திலிருந்து 85ஆம் இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்போர் 57 இடங்களுக்கு விசாவின்றிச் செல்லலாம்.

ஆக குறைந்த சக்திவாய்ந்த கடப்பிதழ்களாக ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் கடப்பிதழ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் 26 இடங்களுக்கு மட்டுமே விசா அனுமதியின்றிச் செல்ல முடியும். அதே நேரத்தில், சிரியா, ஈராக் நாடுகளின் குடிமக்கள் முறையே 27 மற்றும் 31 நாடுகளுக்கு மட்டுமே விசாவின்றிச் செல்ல முடியும்.

குறிப்புச் சொற்கள்