புத்தாக்கக் குறியீட்டுப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய சிங்கப்பூர்

புத்தாக்கக் குறியீட்டுப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய சிங்கப்பூர்

1 mins read
463ea3d4-8728-4bf0-9e31-be712fce5cbc
அனைத்துலகக் புத்தாக்கக் குறியீட்டுப் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டுக்கான அனைத்துலகப் புத்தாக்கக் குறியீட்டுப் (ஜிஐஐ) பட்டியலில் சிங்கப்பூர் இரண்டு படி முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஓஷேனியா வட்டார நாடுகளில் சிங்கப்பூருக்கு முதலிடம்.

ஜிஐஐ என்பது மிகவும் புத்தாக்கமான பொருளியலைக் கொண்ட நாடுகளின் அனைத்துலகத் தரவரிசைப் பட்டியல் ஆகும்.

இந்த ஆண்டு, 132 நாடுகள் அவற்றின் பொருளியலில் கையாண்ட புதுமையான உத்திகளை 80 அம்சங்களின் அடிப்படையில் ஜிஐஐ தரவரிசைப்படுத்தியது.

உலக அறிவுசார் சொத்து அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் இந்தத் தரவரிசையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து 13வது ஆண்டாக முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சுவீடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலிருந்து சரிந்து மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து நான்காவது இடத்திலும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்