தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் 2024ன் இறுதிக்குள் 2 விழுக்காடாகத் தணியக்கூடும்’

1 mins read
3d3a9c3b-26b6-4b59-8604-29bfd8779d9c
மூலாதாரப் பணவீக்க விகிதம் செப்டம்பரில் 2.8 விழுக்காடாகப் பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் இவ்வாண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடாகக் குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பதிவாகக்கூடிய ஆகக் குறைவான விகிதம் அது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது. அது 2025ஆம் ஆண்டில் மேலும் தணியக்கூடும் என்று கூறப்படுகிறது.

தனியார் தங்குமிட, போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்த்து மூலாதாரப் பணவீக்க விகிதம் இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து, ஆணையத்தின் முன்னுரைப்பு வந்துள்ளது.

கடந்த ஜூலையில் 2.5 விழுக்காடாக இறங்கிய மூலாதாரப் பணவீக்கம், ஆகஸ்ட்டில் 2.7 விழுக்காடாகவும் செப்டம்பரில் 2.8 விழுக்காடாகவும் பதிவானது.

ஒட்டுமொத்தமாக ஓராண்டுக்கு மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 2024ல் 2.5 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை இருக்கும் என்று ஆணையம் முன்னுரைத்தது. சென்ற ஆண்டின் 4.2 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவு.

இதற்கிடையே, அனைத்துப் பொருள்களுக்கான பணவீக்கம் இவ்வாண்டு சராசரியாக ஏறக்குறைய 2.5 விழுக்காடாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓராண்டுக்கு முன்னர், அது 4.8 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்