சிங்கப்பூரில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் முதல் படகுச் சேவை விரைவில் தொடங்கப் படுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு அல்ல. ஷெல் நிறுவன ஊழியர்களுக்காக இச்சேவை பிரத்தியேகமாகத் தொடங்கப்படுகிறது.
வரும் மே மாதம் தொடங்கப்படும் புதிய படகுச் சேவை சிங்கப்பூரிலும் உலகளாவிய ஷெல் நிறுவனங்களிலும் முதல் முறையாக இருக்கும்.
புலாவ் புக்கோமில் ஷெல் எனர்ஜி அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர் களையும் ஒப்பந்ததாரர்களையும் ஏற்றிச் செல்வதற்காக இரைச்சலின்றி இயங்கும் மின்சார படகுச் சேவை பயன்படுத்தப்படும்.
இதன் தொடர்பில் நேற்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்துக்கும் ஷெல் ஈஸ்டர்ன் டிரேடிங்குக்கும் இடையே ஐந்து ஆண்டுகால ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது புதிய மின்சாரப் படகுச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதுபோன்ற மேலும் இரண்டு சேவைகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டில் மூன்று மின்சாரப் படகு களை வடிவமைத்து, உருவாக்கி மற்றும் இயக்குவதற்கான ஒப்பந்தத்தை ஷெல் நிறுவனம் வழங்கியது.
இந்தக் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக ஆணையமும் ஷெல் நிறுவனமும் கூட்டாக மின்சார துறைமுக கலன்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சேவைகளில் புகுத்தவிருக்கின்றன. சிங்கப்பூரில் குறைந்த அல்லது முற்றிலும் கரிமக்கழிவற்ற எரிபொருளை மேம்படுத்தவும் அவை முயற்சிகளை எடுத்து வருகின்றன.
ஷெல் தனது தரப்பில் மின்சாரக் கலன்களுக்கான மின்னூட்ட நிலையங்களை எப்படி அதி கரிக்கலாம் என்பது பற்றி ஆராயும்.
அதே சமயத்தில் மற்ற பயனீட்டாளர்களுக்கு கூடுதலாக மின்னூட்ட வசதிகளை வழங்குவது குறித்த நடவடிக்கைகளை ஷெல் நிறுவனம் மேற்கொள்ளும்.
புதிய படகுச் சேவை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்கு வரத்து அமைச்சர் எஸ். ஈஸ் வரன், 2050ஆம் ஆண்டுவாக்கில் கரிம வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்கும் சிங்கப்பூரின் இலக்கில் ஷெல் முக்கியப் பங்காளி எனக் குறிப்பிட்டார்.
பூமியை வெப்பமாக்கும் வாயுக்களை இயன்ற அளவு காற்று மண்டலத்தில் இருந்து வெளியேற்றுவதே நாட்டின் இலக்கு என்றார் அவர்.
டீசலில் ஓடும் படகுகளுக்குப் பதிலாக மூன்று மின்சாரப் படகுகளை இயக்குவதன் மூலம் ஆண்டுக்கு 6,200 டன்னுக்கு அதிகமாக கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என ஷெல் நம்புகிறது.
மின்சாரப் படகுகள் நைட்ரஜன் ஆக்ஸைட்ஸ், சல்ஃபர் ஆக் ஸைட்ஸ் போன்றவற்றை வெளி யேற்றி சூற்றுச்சூழலை பாதிப் பதில்லை.

