உலகின் தலைசிறந்த 50 ஹோட்டல்களில் ராஃபிள்ஸ், கெபெல்லா ஹோட்டல்கள்

உலகின் தலைசிறந்த 50 ஹோட்டல்களில் ராஃபிள்ஸ், கெபெல்லா ஹோட்டல்கள்

2 mins read
e4293ca5-5bba-4a60-8477-d567a06fc91f
வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ராஃபிள்ஸ் ஹோட்டல் 17வது இடத்திலும், செந்தோசாவிலுள்ள கெபெல்லா ஹோட்டல் 28வது இடத்திலும் வந்துள்ளன.  - படங்கள்: ராஃபிள்ஸ் ஹோட்டல், கெபெல்லா சிங்கப்பூர்

முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள உலகின் தலைசிறந்த 50 ஹோட்டல்கள் பட்டியலில் இரு சிங்கப்பூர் ஹோட்டல்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ராஃபிள்ஸ் ஹோட்டல் 17வது இடத்திலும், செந்தோசாவிலுள்ள கெபெல்லா ஹோட்டல் 28வது இடத்திலும் வந்துள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு (சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை காலை) லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பட்டியலில் இடம்பிடித்த 50 ஹோட்டல்களில் கிட்டத்தட்ட பாதி ஐரோப்பாவில் உள்ளன.

இத்தாலியின் லேக் கோமோ பாசாலக்குவா முதலிடத்தைப் பிடித்தது. ஹாங்காங்கில் உள்ள ரோஸ்வுட் ஹாங்காங் ஹோட்டல் இரண்டாவது இடத்தையும், தாய்லாந்தில் உள்ள ஃபோர் சீசன்ஸ் பேங்காக் ஹோட்டல் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

வில்லியம் ரீட் எனும் பிரிட்டி‌‌ஷ் ஊடக நிறுவனம் இந்தப் பட்டியலைத் தயாரித்தது. இந்நிறுவனம் உலகின் தலைசிறந்த 50 உணவகங்கள், தலைசிறந்த 50 மதுக்கூடங்கள் போன்ற பட்டியல்களையும் வெளியிட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த 50 ஹோட்டல் அமைப்புகள் அளித்த வாக்குகளுடன் உலகின் தலைசிறந்த 50 ஹோட்டல்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஹோட்டல்களின் வரவேற்பு முகப்பில் தொடங்கி, ஹோட்டல் அறை, அதிலுள்ள வசதிகள், ஹோட்டலின் உணவகம் உட்பட அனைத்தையும் கருத்தில்கொண்டு வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இந்தப் பட்டியலின் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த ஹோட்டல்களோடு, இன்னும் பல ஆசிய ஹோட்டல்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. நான்காம் இடத்தில் ஹாங்காங்கின் த அப்பர் ஹவுஸ், ஐந்தாம் இடத்தில் ஜப்பானின் அமன் தோக்கியோ, ஏழாம் இடத்தில் மாலத்தீவின் சொனிவா ஃபூ‌ஷி, பத்தாம் இடத்தில் தாய்லாந்தின் மாண்டரின் ஓரியண்டல் இடம்பிடித்திருந்தன.

குறிப்புச் சொற்கள்