தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் வானில் ஒளிரும் குளிர் நிலவு

1 mins read
9e7e2dae-b278-4c49-bd6f-ffe3e62f1282
2024ஆம் ஆண்டின் கடைசி பௌர்ணமி, குளிர் நிலவு என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் 14 அன்று ஸ்பெயினின் ஜராகோசாவில் கிறிஸ்துமஸ் விளக்குகளுக்கு மத்தியில் ஒளிரும் நிலவு. - படம்: இபிஏ

இந்த ஆண்டின் இறுதி முழு நிலவு இன்று (டிசம்பர் 15) இரவு வானத்தையும் சமூக ஊடகங்களையும் ஒளிரச் செய்யும்.

டிசம்பர் 13 மாலை முதல் டிசம்பர் 16 காலை வரை சந்திரன் மூன்று நாட்களுக்கு முழுமையாகத் தோன்றும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூறியது. டிசம்பர் 15 அன்று முழுமையாக இருக்கும்.

சிங்கப்பூரில், குளிர் நிலவு ஞாயிறு இரவு 7.02 மணிக்கு கிழக்கில் உதயமாகி, டிசம்பர் 16 ஆம் தேதி காலை 6.35 மணிக்கு மேற்கில் மறையும் என்று நேஷன்ஸ்ஜியோ (NationsGeo) தெரிவித்துள்ளது.

டிசம்பர் பௌர்ணமி பாரம்பரியமாக குளிர் நிலவு என்று அழைக்கப்படுகிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில் டிசம்பர் மாதம் குளிராகவும் சில இடங்களில் பனிப்பொழிவோடும் இருப்பதால் இது குளிர் நிலவு. டிசம்பரின் நீடித்த இரவு நேரத்தைக் குறிக்கும், நீண்ட இரவின் நிலவு, பனிக்காலத்தை உருவாக்கும் நிலவு உட்பட பல பெயர்கள் டிசம்பர் பௌர்ணமிக்கு உண்டு.

டிசம்பர் 15 அன்று வானத்தின் வடக்குப் புள்ளியில் உதிக்கும் குளிர் நிலவு, வானத்தில் நீண்ட நேரம் இருக்கும் அரிய நிகழ்வாகும். 18,6 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இது ஏற்படும். மற்ற பௌர்ணமி நிலவுகளைவிட அதிக நேரம் முழுமையாக வானத்தில் தோன்றியிருக்கும்.

இந்த முறை நிலவு அதன் வடக்கின் எல்லைக்குச் செல்கையில், வடதுருவத்தின் ஆக நீண்ட இரவும் வருகிறது.

குறிப்புச் சொற்கள்