தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய சின்னத்துடன் 50 ஆண்டு உறவைக் குறிக்கும் சிங்கப்பூர், தென்கொரியா

1 mins read
7c231f5e-7c72-42a3-a8bf-eb8347df3222
இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டுகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் குறிக்கும் சின்னத்தைக் கொண்ட சில பொருள்கள். - படம்: சிங்கப்பூரில் உள்ள கொரியத் தூதரகம் / ஃபேஸ்புக்

தென்கொரியாவும் சிங்கப்பூரும் 50 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் கொண்டாட திங்கட்கிழமை (ஜனவரி 13) புதிய சின்னம் ஒன்றை வெளியிட்டுள்ளன.

கொரிய தேசிய கலை பல்கலைக்கழகத்திற்கும் நன்யாங் நுண்கலைக் கழகத்திற்கும் இடையே நடைபெற்ற போட்டி ஒன்றில் அந்தச் சின்னம் வெற்றிபெற்ற வடிவமைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சிங்கப்பூரில் உள்ள தென்கொரியத் தூதரகம் தெரிவித்தது.

வடிவமைப்பு வல்லுநர்களும் இரு நாடுகளின் வெளியுறவு, கலாசார அமைச்சுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் தூதரகப் பிரதிநிதிகளும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை மறுஆய்வு செய்தனர்.

கொரிய தேசிய கலை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வடிவமைத்த அந்தச் சின்னம், தென்கொரிய, சிங்கப்பூர் தேசிய கொடிகளின் நிறங்களையும் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் பிரதிநிதிக்க அதில் 50 என்ற எண்ணும் அடங்கும்.

1975 முதல் இரு நாடுகளுக்கும் இடையே அரசதந்திர உறவு நிலவுகிறது. 2025ல் அந்த உறவை உத்திபூர்வ பங்காளித்துவமாக மேம்படுத்த திட்டங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

“அந்தத் துடிப்பான வடிவமைப்பு, இரண்டு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் நட்புறவையும் புத்தாக்க உணர்வையும் அழகாகப் பிரதிபலிக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளின் சாதனைகளைக் கௌரவப்படுத்தவும் அடுத்த ஐம்பது ஆண்டுகளின் பங்காளித்துவத்துக்கான வழியை அமைக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்வோம்,’’ என்று தென்கொரியத் தூதர் ஹொங் ஜின் வூக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்