தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலாம் காலாண்டில் வேலையின்மை சற்று அதிகரிப்பு

2 mins read
02d100fe-1f41-4a70-a484-855845c1ff23
கோப்புப் படம்: - சாவ்பாவ்
multi-img1 of 2

இவ்வாண்டு முதலாம் காலாண்டில் சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் சற்று அதிகரித்துள்ளது.

உலகளவில் வர்த்தக ரீதியான பதற்றநிலை அதிகரித்து வருவது, வேலையின்மை விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி, மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் வேலையில் இருப்போரின் எண்ணிக்கை 2,300 கூடியது. இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய காலாண்டில் காணப்பட்ட 7,700ஐக் காட்டிலும் குறைவு.

ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு முதல் காலாண்டுக்கான எண்ணிக்கை 900 குறைந்தது. திங்கட்கிழமை (ஏப்ரல் 28) மனிதவள அமைச்சு வெளியிட்ட முதற்கட்டப் புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில், வேலையில் உள்ள சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை சற்றே அதிகரித்தது என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், சிங்கப்பூர் குடியுரிமையின்றி இங்கு வேலை செய்வோர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

சுகாதாரம், சுமூக சேவை, நிதிச் சேவைத் துறைகளில் வேலையில் இருக்கும் சிங்கப்பூர்வாசிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அதேவேளை, நுபுணத்துவச் சேவை, உற்பத்தி போன்றவற்றில் எண்ணிக்கை குறைந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

சில்லறை வர்த்தகத் துறையில் வேலையில் இருக்கும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை குறைந்தது.

பொதுவாக ஆண்டிறுதி பண்டிகைக் காலங்களில் அதிகமானோர் வேலைக்கு எடுக்கப்படுவதுண்டு. அது இப்போது தணிந்துள்ளதால் சில்லறை வர்த்தகத் துறையில் வேலையில் இருக்கும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடியுரிமையின்றி வேலை அனுமதி அட்டைகளுடன் இங்கு வசிப்போரிடையே வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறைவான திறன்கள் தேவைப்படும் வேலைகளைச் செய்யும், வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்தது அதற்கு முக்கியக் காரணம்.

ஒட்டுமொத்தமாக ஜனவரியிலிருந்து மார்ச்சுக்கு இடைப்பட்ட காலத்தில் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காடாகப் பதிவானது. டிசம்பரில் இந்த விகிதம் 2.8 விழுக்காடாக இருந்தது.

மார்ச்சில் பதிவான வேலையின்மை விகிதம் 3.1 விழுக்காடு. பிப்ரவரியில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் விகிதம் சீராக இருந்திருந்தாலும் டிசம்பரில் பதிவான 2.9 விழுக்காட்டைவிட அது அதிகமாகும்.

அதேவேளை, வேலையின்மை விகிதம், பொருளியல் மோசமடைந்துள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில் மோசமாக இல்லை என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்