சிங்கப்பூரில் இம்மாதத்தின் முதல் இரு வாரங்களில் பிற்பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சில நாள்களில் மாலை வேளைகளிலும் கனமழை தொடரலாம் என்று சிங்கப்பூர் வானிலை நிலையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்தது.
பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச அன்றாட வெப்பநிலை 32லிருந்து 34 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும். சில நாள்கள் அது 34 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. டிசம்பர் 26ஆம் தேதி பிற்பகல் பெய்த பெருமழையால் தீவின் தெற்கு, மேற்கு, மத்தியப் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

