தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகச் செல்வாக்குமிக்க சிங்கப்பூர் கடப்பிதழ்; ஆனாலும் சில நாடுகளுக்கு விசா தேவை

1 mins read
491d414d-187f-4867-bf1f-f264e6531634
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் செல்ல சிங்கப்பூரர்கள் விசா பெறவேண்டும். - படம்: எஸ்பிஎச்

சிங்கப்பூர் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் பிரிட்டன், அமெரிக்கா உட்பட 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்லலாம் என்றாலும், சில நாடுகளுக்குச் செல்ல இன்னமும் விசா தேவைப்படுகிறது.

ஹென்லி கடப்பிதழ் குறியீடு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவரிசைப்படி, உலகிலேயே ஆகச் செல்வாக்குமிக்கதாக சிங்கப்பூர் கடப்பிதழ் தகுதி பெறுகிறது.

ஆயினும், சீனா, இந்தியா, பூட்டான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் செல்ல சிங்கப்பூரர்கள் விசா பெறவேண்டும்.

சட்டவிரோதக் குடிநுழைவை ஒடுக்குவதற்கும் பாதுகாப்புக்கும் பயண விசா துணைபுரிவதாக கடப்பிதழ் குறியீட்டுத் தளம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரர்கள் விசா அனுமதி பெறவேண்டிய நாடுகளின் பட்டியலை இங்கே காணலாம்.

ஆசியா

1. ஆப்கானிஸ்தான்

2. பூட்டான்

3. சீனா

4. இந்தியா

5. வடகொரியா

6. துர்க்மெனிஸ்தான்

மத்திய கிழக்கு

1. ஈராக்

2. சிரியா

3. ஏமன்

ஐரோப்பா

1. ர‌‌ஷ்யா

2. உக்ரேன்

ஆப்பிரிக்கா

1. அல்ஜீரியா

2. கெமரூன்

3. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு

4. சாட்

5. காங்கோ (ஜனநாயகக் குடியரசு)

6. காங்கோ (குடியரசு)

7. எக்வடோரியல் கினி

8. எரிட்ரியா

9. எத்தியோப்பியா

10. கபோன்

11. லைபீரியா

12. லிபியா

13. மாலி

14. நைஜர்

15. நைஜீரியா

16. சாவ் டோம் அண்ட் பிரின்சிப்

17. தெற்கு சூடான்

18. சூடான்

அமெரிக்கா

1. ஃபாக்லண்ட் தீவு

2. கயானா

3. வெனிசுவேலா

ஓஷேனியா

1. நவ்ரு

2. பாப்புவா நியூ கினி

குறிப்புச் சொற்கள்