கடலில் கவிழ்ந்த சிங்கப்பூர் கப்பல்; 15 சிப்பந்திகள் மீட்பு, இருவர் மரணம்

கடலில் கவிழ்ந்த சிங்கப்பூர் கப்பல்; 15 சிப்பந்திகள் மீட்பு, இருவர் மரணம்

படம்: பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படை/ பிலிப்பீன்ஸ்

26 Jan 2026 - 11:52 am

1 mins read

சிங்கப்பூரில் பதிவான கப்பலான ‘டேவோன் பே’ தென்சீனக் கடலில் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 23) கவிழ்ந்தது.

இந்நிலையில், அக்கப்பலின் சிப்பந்திகள் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மாண்ட இரு கப்பல் சிப்பந்திகளின் உடல்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மீட்கப்பட்ட சிப்பந்திகள் அவரவர் வீடு திரும்ப ‘டேவோன் பே’யை இயக்கும் கப்பல் நிறுவனமான ‘கே லைன்’ தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

‘டேவோன் பே’ கப்பல் 2013ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது.

சீனாவின் யாங்ஜியாங்கிற்குச் சென்றுகொண்டிருந்தபோது ஸ்கார்பொரோ தீவுகளுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் அது கவிழ்ந்தது.

சம்பவம் நிகழ்ந்தபோது கப்பலில் 21 சிப்பந்திகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நான்கு கப்பல் சிப்பந்திகளைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன என்றும் ‘கே லைன்’ நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்கப்பல்மரணம்மீட்பு