சிங்கப்பூரில் காற்றின் தரம் தொடர்ந்து மேம்படுகிறது

சிங்கப்பூரில் காற்றின் தரம் தொடர்ந்து மேம்படுகிறது

படம்: சாவ்பாவ்

28 Oct 2026 - 9:50 am

1 mins read

சிங்கப்பூரில் காற்றின் தரம் தொடர்ந்து சீரடைந்து வருகிறது. தீவு முழுவதும் மணிக்கு ஒருமுறை கணக்கிடப்படும் பிஎம்2.5 அளவு இயல்பு நிலையிலும் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) நல்ல, மிதமான நிலையிலும் நீடிக்கின்றன.

புதன்கிழமை (அக்டோபர் 28) காலை 6 மணி நிலவரப்படி, தீவின் ஐந்து வட்டாரங்களிலும் பிஎம்2.5 அளவு 26 முதல் 46 வரை பதிவாகியது. 24 மணி நேர பிஎஸ்ஐ, 66 முதல் 76 வரை இருந்தது. புதன்கிழமை பிஎஸ்ஐ 60 முதல் 90 வரை இருக்கும் என தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னதாகக் கணித்திருந்தது.

இந்தோனீசியாவின் கலிமந்தான், சுமத்ரா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை புகைமூட்டம் தென்பட்டது. அன்றைய தினம் சிங்கப்பூரில் வறண்ட வானிலை நிலவியது. இருப்பினும், சிங்கப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது புகைமூட்ட நிலவரத்தை மேம்படுத்த உதவும்.

புதன்கிழமை காற்று கிழக்கு-வடகிழக்கு திசையிலிருந்து வீசும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தென்கிழக்கு அல்லது தெற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்