சிங்கப்பூரின் மூலாதார பணவீக்கம் ஏப்ரலில் 0.7% கூடியது

2 mins read
cb43e9bb-75b3-4faa-8e93-cdf5d9ee4bc4
ஒட்டுமொத்த பணவீக்கம் 0.9 விழுக்காடாகப் பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மூலாதார பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் உயர்ந்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வாரியமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வெள்ளிக்கிழமை (மே 23) தெரிவித்தன.

மார்ச் மாதம், நான்கு ஆண்டுகளில் குறைவாக பதிவான 0.5 விழுக்காடு மூலாதார பணவீக்கம், ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 0.7% கூடியது.

இங்குள்ள குடும்பங்களின் செலவினங்களை இன்னும் சிறந்த முறையில் பிரதிபலிக்க தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் ஆகியவை மூலாதார பணவீக்கத்தில் சேர்க்கப்படவில்லை.

புளூம்பர்க் கருத்தாய்வில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்த 0.5 விழுக்காட்டைவிட மூலாதார பணவீக்கம் கூடியது.

ஒட்டுமொத்த பணவீக்கம் 0.9 விழுக்காடாகப் பதிவானது. 

ஏப்ரல் மாதத்தில் அடிப்படை பணவீக்கம் உயர்ந்துள்ளபோதும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூரின் அடிப்படை, ஒட்டுமொத்த பணவீக்கம் 0.5 விழுக்காட்டிலிருந்து 1.5 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைத்ததை மாற்றவில்லை.

அனைத்துலக கச்சா எண்ணெய் விலைகள் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. உணவுப்பொருள் விலை உயர்வும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்றும் ஆணையமும் அமைச்சும் குறிப்பிட்டன.

சுகாதாரக் காப்புறுதிக்கான செலவுகளால் சேவைகளுக்கான பணவீக்கம் 1.1 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. மார்ச் மாதம் அது 0.6 விழுக்காடாக இருந்தது. 

மின்சாரம், எரிவாயு விலைகள் 3.5 விழுக்காடு குறைந்தது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதில் பெரிய மாற்றங்கள் இல்லை.

மார்ச் மாதத்தில் 0.5 குறைந்த சில்லறை வர்த்தகமும் இதர பொருள்களின் விலையும் ஏப்ரலில் 1.2 விழுக்காடு சரிந்தன. அவற்றின் விலைகள் துரிதமாகச் சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தனியார் போக்குவரத்து விலைகள் 1.3 விழுக்காடு தணிந்தன.

குறிப்புச் சொற்கள்