சிங்கப்பூரின் சிறந்த விளையாட்டாளர் விருது வென்ற கோல்ஃப் வீராங்கனை

சிங்கப்பூரின் சிறந்த விளையாட்டாளர் விருது வென்ற கோல்ஃப் வீராங்கனை

ஐரோப்பிய ‘Ladies European Tour Order of Merit’ விருதை வென்ற முதல் சிங்கப்பூர்ப் பெண்மணி ஷெனன் டான்
1 of 3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஏஎஃப்பி
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Apr 2026 - 9:52 am

1 mins read

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ், ஆகச் சிறந்த விளையாட்டாளர் விருதை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

அந்த வரிசையில் கடந்த 2025ஆம் ஆண்டுக்கான ஆகச் சிறந்த விளையாட்டாளர் விருதினை கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை ஷெனன் டான் வென்றுள்ளார்.

தொழில்முறையில் அவ்விளையாட்டில் பங்கெடுத்து வரும் 21 வயது ஷெனன், கடந்த ஆண்டு பல குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்தார்.

மகளிர்க்கான ஐரோப்பிய ‘Ladies European Tour Order of Merit’ விருதை வென்ற முதல் சிங்கப்பூர்ப் பெண்மணி அவராவார்.

மேலும், ஜெர்மனியின் மாஸ்டர்ஸ் விருது, இந்தியப் பொது விருது போன்ற பல அபார வெற்றிகள் அவருக்குச் சிங்கப்பூரில் ஆகச் சிறந்த விளையாட்டாளர் என்ற விருதையும் பெற்றுத்தந்துள்ளது.

இளையோரை கோல்ஃப் விளையாட்டில் ஈர்த்து, அவர்களை ஊக்குவிக்க ஷெனன் டான் விழைகிறார்.

குறிப்புச் சொற்கள்