சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 2.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
அடுத்த ஆண்டில் பொருளியல் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகப் பதற்றநிலை எதிர்பார்த்த அளவுக்குக் கடுமையாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுவதால் இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு ஏற்றம் கண்டிருப்பதாகத் தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 2.4 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நடத்திய காலாண்டு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஜூன் மாத முன்னுரைப்பைவிட இது அதிகம்.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஜூன் மாத ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
ஆணையத்தின் ஆக அண்மைய ஆய்வின் முடிவுகள் புதன்கிழமை (செப்டம்பர் 3) வெளியிடப்பட்டன.
நிபுணத்துவ முன்னுரைப்பாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உற்பத்தித்துறை, கட்டுமானத்துறை, மொத்த வியாபாரம், சில்லறை வர்த்தகம், முக்கிய ஏற்றுமதி ஆகியற்றின் நிலை மேம்பட்டுள்ளதால் ஆக அண்மைய பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பும் ஏற்றம் கண்டுள்ளது.
இருப்பினும், அடுத்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்றும் அது 1.9 விழுக்காடாகப் பதிவாகும் என்றும் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருப்பதாக ஆணையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டுக்கான ஆக அண்மைய பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 2024ஆம் ஆண்டின் பொருளியல் வளர்ச்சியைவிட குறைவு.
2024ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி 4.4 விழுக்காடாகப் பதிவானது.
இதற்கு புவிசார்ந்த அரசியல் பதற்றநிலை முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
பகுதிமின்கடத்தி, மருந்துகள் ஆகியவை மீதான வரிவிதிப்பு இதில் அடங்கும்.

