சிங்கப்பூர் பொருளியல் 4.6% வளர்ச்சி; எதிர்பார்ப்பைக் குறைத்தது ஈரான் போர்

சிங்கப்பூர் பொருளியல் 4.6% வளர்ச்சி; எதிர்பார்ப்பைக் குறைத்தது ஈரான் போர்

2 mins read
e6814401-4ade-4f73-86af-645f0705c1af
2026ன் முதலாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி 5.9 விழுக்காடாக இருக்கும் என புளூம்பெர்க் கணித்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈரான் போர் சிங்கப்பூரின் வளர்ச்சி வேகத்தை முடக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அதிக இறக்குமதிச் செலவுகளையும் விநியோகத் தடைகளையும் எதிர்கொள்ள நாடு தயாராகி வருகிறது.

அதனால், நம்பிக்கைக்குரிய ஆண்டாக இவ்வாண்டு இருக்கும் என்று எழுந்த எதிர்பார்ப்பு தணிந்து வருகிறது.

வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளது.

சிங்கப்பூரின் பொருளியல் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக 4.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இது ஆண்டுக்காண்டு அடிப்படையிலான கணிப்பு.

பிப்ரவரி மாத இறுதியில் உருவெடுத்த ஈரான் போர், இனி வரவிருக்கும் காலாண்டுகளுக்கான வளர்ச்சி வேகத்தை மங்கச் செய்துள்ளது.

பொருளியல் வளர்ச்சி, முந்தைய காலாண்டில் 5.7 விழுக்காட்டுக்கு விரிவடைந்த நிலையிலிருந்து சற்று மிதமடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

“2026ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி தொடர்ந்து மீள்திறனுடன் நீடித்தபோதிலும், ஈரானுடனான அமெரிக்க, இஸ்ரேல் மோதல், இனிவரும் காலாண்டுகளில் அதன்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்று அமைச்சு கூறியுள்ளது.

முன்னதாக, 2026ன் முதலாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி 5.9 விழுக்காடாக இருக்கும் என புளூம்பெர்க் கணித்திருந்தது.

பருவத்திற்கேற்ப சரிசெய்யப்பட்ட பின்னர், காலாண்டு அடிப்படையில் பொருளியல் 0.3 விழுக்காடு சுருங்கியுள்ளது. இது, கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பதிவான 1.3 விழுக்காடு வளர்ச்சியிலிருந்து நேர்மாறான ஒரு திருப்பம் என்றது அமைச்சு.

போர் தொடங்குவதற்கு முன்புவரை, 2026ஆம் ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 2 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை இருக்கும் என்று அமைச்சு அதிக எதிர்பார்ப்புடன் கணித்திருந்தது. வலுவான வளர்ச்சி வேகம் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வலுவான தேவை ஆகியவற்றின் அடிப்படையில் அந்தக் கணிப்பு இருந்தது.

போருக்குப் பின்னர், கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. உலகின் மொத்த எண்ணெய் தேவையில் 20 விழுக்காடு கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் விநியோகம் பாதிப்படைந்துவிட்டது. இது ஆசியா முழுவதும் உள்ள வர்த்தகம் சார்ந்த பொருளியல்களின் வருங்கால வாய்ப்புகளை மங்கச் செய்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்