தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்த் தொழிற்சாலைகளில் ஜூலை மாதம் உற்பத்தி சுருங்கியது

1 mins read
683664ef-a5e3-450c-a8a6-729daf4bbdb2
சிங்கப்பூரின் உற்பத்தியில் 40 விழுக்காட்டுப் பங்கை வகிக்கும் மின்னணுத் துறை சற்று முன்னேற்றம் கண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி மாத அடிப்படையில் ஜூலை மாதம் சுருங்கியது. அமெரிக்காவின் புதிய வரிகள் குறித்த நிச்சயமற்ற நிலை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கொள்முதல் நிர்வாகிகள் குறியீடு (PMI) ஜூலை மாதம் 49.9க்குக் குறைந்தது. ஜூன் மாதம் அது 50 புள்ளியாக இருந்தது.

குறியீடு 50க்கும் மேல் இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். 50க்குக் குறைவாக இருந்தால் அது சுருக்கத்தைச் சுட்டும்.

சிங்கப்பூரின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டுக்குப் பங்களிக்கும் மின்னணுத் துறை, சற்று முன்னேற்றம் கண்டது. ஜூன் மாதம் 50.1ஆக இருந்த அதன் கொள்முதல் குறியீடு ஜூலை மாதம் 50.2க்குக் கூடியது.

சிங்கப்பூர்க் கொள்முதல், மூலப்பொருள்கள் நிர்வாகக் கழகம் அந்த விவரங்களை வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்