தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூரின் தந்தையாகப் போற்றப்பட்டவருக்கு 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி

தஞ்சோங் பகாரின் வளர்ச்சிக்கும் சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கும் அமரர் லீ தலைமைதாங்கினார்: இந்திராணி ராஜா

2 mins read
6a45a1de-2bbf-430c-bad2-578becc003f1
அமரர் லீ குவான் யூவுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, கல்வியமைச்சர் சான் சுன் சிங், அடித்தள ஆலோசகர்கள். - படம்: த.கவி
multi-img1 of 3

சிங்கப்பூரின் உருமாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட முதல் பிரதமர் லீ குவான் யூவை நினைவுகூர சனிக்கிழமை (மார்ச் 22), தஞ்சோங் பகாரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தளத் தலைவர்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

திரு லீயின் நினைவாக ‘டக்ஸ்டன் பிலெய்ன்’ பூங்காவில் 2015ஆம் ஆண்டு நடப்பட்ட ‘தெம்புசு’ மரத்தின்கீழ் பூக்களை வைத்து அமரர் லீக்கு அவர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அடித்தள ஆலோசகர்கள் திரு லீயின் நினைவாக ‘டக்ஸ்டன் பிலெய்ன்’ பூங்காவில் 2015ஆம் ஆண்டு நடப்பட்ட ‘தெம்புசு’ மரத்தின்கீழ் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அடித்தள ஆலோசகர்கள் திரு லீயின் நினைவாக ‘டக்ஸ்டன் பிலெய்ன்’ பூங்காவில் 2015ஆம் ஆண்டு நடப்பட்ட ‘தெம்புசு’ மரத்தின்கீழ் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். - படம்: த.கவி

அமரர் லீயை நினைவுகூரும் கண்காட்சி

திரு லீ மறைந்து 10 ஆண்டுகளான நிலையில் தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் இவ்வார இறுதியில் (மார்ச் 22, 23) இரவு 9 மணி வரை சிறப்புக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அமரர் லீ மேற்கொண்ட முக்கிய மைல்கல் திட்டங்கள் பற்றிய தகவல்களும் அவரை நினைவுபடுத்தும் பழைய புகைப்படங்களும் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமரர் லீ மேற்கொண்ட முக்கிய மைல்கல் திட்டங்கள் பற்றிய தகவல்களும் அவரை நினைவுபடுத்தும் பழைய புகைப்படங்களும் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. - படம்: த.கவி

அமரர் லீ மேற்கொண்ட முக்கிய மைல்கல் திட்டங்கள் பற்றிய தகவல்களும் அவரை நினைவுபடுத்தும் பழைய புகைப்படங்களும் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் 200 ஆண்டுப் பயணத்தைச் சித்திரிக்கும் 67 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் உயரமும் கொண்ட ஓவியத்தையும் தஞ்சோங் பகார் மன்றத்தில் மார்ச் 23ஆம் தேதிவரைக் காணலாம். 
சிங்கப்பூரின் 200 ஆண்டுப் பயணத்தைச் சித்திரிக்கும் 67 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் உயரமும் கொண்ட ஓவியத்தையும் தஞ்சோங் பகார் மன்றத்தில் மார்ச் 23ஆம் தேதிவரைக் காணலாம்.  - படம்: த.கவி
சிங்கப்பூரின் 200 ஆண்டுப் பயணத்தைச் சித்திரிக்கும் 67 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் உயரமும் கொண்ட ஓவியத்தையும் தஞ்சோங் பகார் மன்றத்தில் மார்ச் 23ஆம் தேதி வரை  காணலாம். 
சிங்கப்பூரின் 200 ஆண்டுப் பயணத்தைச் சித்திரிக்கும் 67 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் உயரமும் கொண்ட ஓவியத்தையும் தஞ்சோங் பகார் மன்றத்தில் மார்ச் 23ஆம் தேதி வரை காணலாம்.  - படம்: த.கவி

சிங்கப்பூரின் 200 ஆண்டுப் பயணத்தைச் சித்திரிக்கும் 67 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் உயரமும் கொண்ட ஓவியத்தையும் அதில் காணலாம்.

எஸ்ஜி60யை முன்னிட்டு நாட்டின் எதிர்காலத்துக்குப் பங்காற்ற மக்கள் தம் உறுதிமொழிகளைச் சுவரில் ஒட்டினர்.

எஸ்ஜி60யை முன்னிட்டு நாட்டின் எதிர்காலத்துக்குப் பங்காற்ற அடித்தள ஆலோசகர்களும் மக்களும் தம் உறுதிமொழிகளைச் சுவரில் ஒட்டினர்.
எஸ்ஜி60யை முன்னிட்டு நாட்டின் எதிர்காலத்துக்குப் பங்காற்ற அடித்தள ஆலோசகர்களும் மக்களும் தம் உறுதிமொழிகளைச் சுவரில் ஒட்டினர். - படம்: த.கவி

எக்காலத்திற்கும் ஏற்ற சிந்தனை உடையவர்

திரு லீயை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா பேசினார்.

திரு லீ முன்னர் கூறிய பல கருத்துகள் பல ஆண்டுகள் கடந்து இன்றும் ஏற்புடையவையாக உள்ளதாக அமைச்சர் கூறினார்.

“தஞ்சோங் பகார் சிங்கப்பூரின் ஆக வறுமையான பகுதிகளில் ஒன்றாக அப்போது இருந்ததால்தான் தேர்தலில் இங்கு நின்றதாகத் திரு லீ கூறினார். மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான வாய்ப்பாக அவர் அதைக் கருதினார்,” என்று குமாரி இந்திராணி திரு லீக்குப் புகழாரம் சூட்டினார்.

வர்த்தகங்களுடன் தொடர்புகளை வலுப்படுத்துவது, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வாடகை வீடுகள் கட்டுவது, வேலைகள் உருவாக்குவது, சுற்றுப்புறத்தைக் காப்பது எனத் தஞ்சோங் பகாரின் வளர்ச்சிக்கும் சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கும் அமரர் லீ தலைமைதாங்கினார்.
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா

‘மக்கள்தான் அடித்தளம், நாடு முதன்மையானது’, ‘மாற்றங்கள் தேவைப்பட்டால் மாறவேண்டும்’, ‘சட்டத்துக்கு யாவரும் உட்பட்டவர்களே’ என்பன போன்ற அமரர் லீயின் கொள்கைகளைக் கல்வியமைச்சர் சான் சுன் சிங் நினைவுகூர்ந்தார்.

“தமக்கான நினைவுச்சின்னங்களை அமைப்பதில் திரு லீக்கு அவ்வளவாக விருப்பமில்லை. அவை இல்லாமலேயே இன்று அவரின் தாக்கத்தை எங்கும் உணரமுடிகிறது,” என்றார் அமைச்சர் சான்.

அமரர் லீயின் கொள்கைகளைக் கல்வியமைச்சர் சான் சுன் சிங் நினைவுகூர்ந்தார்.
அமரர் லீயின் கொள்கைகளைக் கல்வியமைச்சர் சான் சுன் சிங் நினைவுகூர்ந்தார். - படம்: த.கவி

மக்களின் தேவைகளை அடித்தளத் தலைவர்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் சமூக நிகழ்ச்சிகளில் அனைத்து இனத்தவரையும் ஈடுபடுத்தவேண்டும் என்றும் அமரர் லீ வலியுறுத்தியதாகக் கூறினார் தஞ்சோங் பகார் எவர்ட்டன் பார்க் குடியிருப்பாளர் குழுவின் முன்னாள் தலைவர் கணேசன் குழந்தை, 70.

“திரு லீ தஞ்சோங் பகார் பகுதியையே புதுப்பித்தார். மரம் நடும் தினத்தைத் தொடங்கிவைத்து நகரைப் பூங்காவாக மாற்றினார்,” என்றார் லெங் கீ இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் ஜலாலுதீன் பீர் முகம்மது, 68.

குறிப்புச் சொற்கள்