சிங்கப்பூரின் ‘நெட்பிளிக்ஸ்’ பிரபலம்மீது வழக்கு

சிங்கப்பூரின் ‘நெட்பிளிக்ஸ்’ பிரபலம்மீது வழக்கு

1 mins read
02b861a6-862e-4e7f-a265-ef80c6568dd1
யோங், ‘நெட்பிளிக்ஸ்’ தொடரான சூப்பர் ரிச் இன் கொரியாவில் (Super Rich In Korea) நடித்துள்ளார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தொழில் அதிபர் டேவிட் யோங் மீது கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய இரண்டு குற்றச்சாட்டுகள் உட்பட 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

யோங், ‘நெட்பிளிக்ஸ்’ தொடரான சூப்பர் ரிச் இன் கொரியாவில் (Super Rich In Korea) நடித்துள்ளார்.

கடன் வழங்க அனுமதி இல்லாத ஒரு நிறுவனத்தை யோங், 1.1 மில்லியன் வெள்ளி கடன் வழங்க அனுமதித்துள்ளார்.

‘எவர்கிரீன் அசட்ஸ் மேனேஜ்மெண்ட்’ என்ற நிறுவனத்தில் பணியாற்றியபோது யோங் குற்றச்செயலில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது எவர்கிரீன் ஜிஹெச் (Evergreen GH) என்று அந்த நிறுவனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் 16 முறை கடன் வழங்கியுள்ளது. 10 பேர் அக்கடனை வாங்கியுள்ளனர்.

கடன் வழங்கிய சம்பவம் 2020ஆம் பிப்ரவரி ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையில் நடந்தது.

பொய்யான கணக்குகள் வைத்திருந்த காரணத்திற்காக 38 வயதான யோங் மீது மேலும் கூடுதலாக 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சதிச் செயலில் யோங்கிற்கு துங் சாய் ஃபன் என்ற மற்றோர் ஆடவர் உதவியுள்ளார். அவர் குறித்த விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.

யோங் மீதான வழக்குக்கு முந்தைய விசாரணை மே 8ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்