சிங்கப்பூரின் நவம்பர் மாத ஏற்றுமதி 11.5% ஏற்றம்

2 mins read
28e87d9e-8246-4c84-bb8a-40469909f762
பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட கொள்கலன் பாரந்தூக்கிகள் இயங்கும் பகுதி. அக்டோபர் 21 அன்று எடுக்கப்பட்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிட சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி நவம்பர் மாதம் 11.6 விழுக்காடு ஏற்றம் கண்டது.

ஏற்ற இறக்கமாக உள்ள மருத்துவத் துறையும், மின்னணுப் பொருள்களின் வளர்ச்சியும் இதற்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது.

புளூம்பர்க் நிறுவனத்தின் கணிப்பாளர்கள் 6.8 விழுக்காடு வளர்ச்சியை நவம்பர் மாதத்துக்கு முன்னுரைத்திருந்தனர்.

அமெரிக்காவுக்கு அதிக அளவில் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் காரணமாக இது சாத்தியமானது. எண்ணெய் சாரா ஏற்றுமதியின் அளவு அக்டோபர் மாதம் திருத்தப்பட்ட 21.7 விழுக்காடு விரிவடைந்தாலும் நவம்பர் மாதம் சற்று மிதமடைந்தது.

மேலும் எண்ணெய் சாரா ஏற்றுமதியின் அளவு இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் 4.8 விழுக்காடு உயர்ந்துள்ளது என எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு புதன்கிழமை (டிசம்பர் 17) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் வர்த்தக அமைப்பு, 2025ஆம் ஆண்டுக்கான அதன் முன்னுரைப்பை 2.5 விழுக்காடு என நிர்ணயித்துள்ளது. ஆரம்பத்தில் முழு ஆண்டுக்கான வளர்ச்சியை அது 1 முதல் 3 விழுக்காடு என கணித்திருந்தது. அமெரிக்கா விதித்திருந்த வர்த்தக வரிக்கு முன்பாக செய்யப்பட்ட ஏற்றுமதி மிதமடைந்து, வரி நடப்புக்கு வந்ததும், 2026ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி வளர்ச்சி 0 முதல் 2 விழுக்காடு இருக்கும் என எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு எதிர்பார்க்கிறது.

நவம்பர் மாதம் மின்னியல் பொருள்களின் ஏற்றுமதி 13.1 விழுக்காடு உயர்ந்தது. குறிப்பாக ஒருங்கிணைந்த மின்னியல் வடங்கள், சில்லுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி 22.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. கணினிகள், மின்னியல் சாதனங்களுக்கு பயன்படும் அச்சிடப்பட்ட மின்பலகைகள் போன்றவற்றின் ஏற்றுமதி 26.8 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இவையாவும் மின்னியல் ஏற்றுமதிக்கு பெரும்பங்களித்துள்ளன. மின்னியல் அல்லாத ஏற்றுமதிகள் 11.1 விழுக்காடு ஏற்றம் கட்டுள்ளது. அதற்கு முந்தைய அக்டோபர் மாதம் அவை 18.1 விழுக்காடு இருந்தன.

மருத்துவப் பொருள்கள் 369.8 விழுக்காடும் மோட்டார்கள், மின் இயந்திரங்கள் 123.2 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

அவை அனைத்தும் நிச்சயமற்ற அமெரிக்க வரிவிதிப்பு சார்ந்து நிகழ்ந்துள்ளன.

நவம்பர் மாதம் தைவானுக்கு ஏற்றுமதி 15.7 விழுக்காடு அதிகரித்தாலும் இந்தோனீசியா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்