ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், இளம் ஊர்வன விலங்குகள் இருப்பதை வரவேற்றுள்ளன.
பிலிப்பீன்ஸைச் சேர்ந்த முதலை, பெயின்டட் டெர்ரப்பின் வகையைச் சேர்ந்த ஆமை உள்ளிட்ட அருகிவரும் இனங்கள் இவற்றில் அடங்கும் .
மூன்று சீன லெப்பர்ட் கெக்கோ வகை பல்லிகள், 13 மேற்கத்திய கெபூன் வைப்பர் வகை பாம்புகள் ஆகியவை அந்த மூன்று புதிய வகை பாம்புகள்.
மனிதப் பராமரிப்பில் ஆரோக்கியமான, மரபணு பன்முகத்தன்மை கொண்ட விலங்குகள் எண்ணிக்கையை அனைத்துலக விலங்கியல் தோட்டச் சமூகம் கட்டிக்காப்பதற்கான முயற்சிகளுக்கு இந்த இனப்பெருக்க முயற்சிகள் ஆதரவளிக்கும் என்று மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்தது.
வெற்றிகரமான ஒவ்வோர் இனப்பெருக்கத்திற்கும் பின்னால் விடாமுயற்சி, சோதனை, கவனமிக்க திட்டமிடுதல் ஆகியவற்றின் பங்கு இருப்பதாகத் திரு லியூக் ஹார்டிங் தெரிவித்தார்.
“மனிதப் பராமரிப்பின்கீழ் இவற்றை வளர்ப்பது எளிதன்று. எனவே அவை பெருக்கம் அடைவதைக் காண்பது எங்களுக்கு நிறைவாகவும் அர்த்தம் மிக்கதாகவும் உள்ளது,” என்று அவர் கூறினார்.
ஜூன் மாத நிலவரப்படி, சிங்கப்பூரின் விலங்கியல் தோட்டம், 80 ஊர்வன விலங்குகளுக்கு இல்லமாகத் திகழ்கிறது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அருகி வருபவை.
ஐந்து வனவிலங்குப் பூங்காக்கள் உள்ள மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட விலங்கு வகைகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய விலங்குகளுக்கான ரெப்டோப்பியா எனப்படும் சரணாலயம், 2017ல் திறக்கப்பட்டது. அது, நான்கு புவியியல் வட்டாரங்களைக் கொண்டுள்ளது.