தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்போஸ்ட்: சொத்துகள் விற்கப்படும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது

2 mins read
ab654b6a-896f-4d3d-8de3-0700c2b1982e
பிப்ரவரி மாதம் நடைபெறும் அவசரப் பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே ஃபிரைட் மேனேஜ்மண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விற்கப்படும் என்று ஜனவரி 6ஆம் தேதியன்று சிங்போஸ் அறிக்கையில் குறிப்பிட்டது. - படம்: புளூம்பர்க்

சிங்போஸ்ட் நிறுவனம் தனது சொத்துகளை விற்பது தொடர்பாக பலதரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இருப்பினும், தனது சொத்துகள் விற்கப்படும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று அது திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) பங்குச் சந்தை திறப்பதற்கு முன்பு கூறியது.

சிங்போஸ்ட் நிறுவனம் அதற்குச் சொந்தமான இரண்டு வர்த்தகப் பிரிவுகளை விற்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய மேபேங்க் செக்யூரிட்டிஸ், அந்தப் பரிவர்த்தனைகள் பூர்த்தியானதும் சிங்போஸ்ட் சிறப்பு ஈவுத்தொகையை வழங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.

மேபேங்க் செக்யூரிட்டிஸ் குறிப்பிட்ட அந்த இரண்டு வர்த்தகப் பிரிவுகள் சிங்போஸ்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆஸ்திரேலியத் தளவாட வர்த்தகமான ஃபிரைட் மேனேஜ்மண்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் சரக்கு விநியோக வர்த்தகமான ஃபேமஸ் ஹோல்டிங்ஸ் ஆகும்.

ஃபேமஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கான விற்பனை 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பூர்த்தியாகிவிடும் என்று மேபேங்க் செக்யூரிட்டிஸ் கூறியது.

அதன்மூலம் $80 மில்லியனிலிருந்து $100 மில்லியன் வரை கிடைக்கலாம் என்று அது தெரிவித்தது.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெறும் அவசரப் பொதுக் கூட்டத்தில் பங்தாரர்களின் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே ஃபிரைட் மேனேஜ்மண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விற்கப்படும் என்று ஜனவரி 6ஆம் தேதியன்று சிங்போஸ்ட் அறிக்கையில் குறிப்பிட்டது.

முறையற்ற வகையில் செயல்பட்டதற்காகக் கடந்த டிசம்பர் மாதம் மூன்று மூத்த நிர்வாகிகளை சிங்போஸ்ட் பதவிநீக்கம் செய்தது.

முறையற்ற செயல்பாடு தொடர்பாக கிடைத்த புகாரை சிங்போஸ்ட்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் பாங், தலைமை நிதி அதிகாரி வின்சென்ட் யிக், அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி லீ யூ ஆகியோரை சரியான முறையில் கையாளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சொத்துகளை விற்பது தொடர்பான உத்திகள் மறுஆய்வு செய்யப்படும் என்று சிங்போஸ்ட் குழுமம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்