பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாகச் சேவையாற்றியுள்ள 61 வயது திரு சித்தோ யீ பின் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் புதன்கிழமை (ஏப்ரல் 16) பேசிய அவர், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து மூன்று தவணைக் காலத்துக்குப் பொத்தோங் பாசிரைப் பொதுத் தேர்தல்களில் விட்டுக்கொடுக்காமல் கைப்பற்றினார்.
திரு சித்தோவிடம் பலவற்றைக் கற்றுக்கொண்டதாக பொத்தோங் பாசிரில் போட்டியிடவிருக்கும் திரு அலெக்ஸ் இயோ தெரிவித்தார்.
2001ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த திரு சித்தோவிடம் அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட திரு சியாம் சீ டோங்கின் பிடியிலிருந்து பொத்தோங் பாசிரைக் கைப்பற்றுவதற்கான பொறுப்பு கொடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினரான திரு சியாம் கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் பொத்தோங் பாசிரில் கோலோச்சினார்.
90 வயது திரு சியாம் அப்போதிருந்த மக்கள் செயல் கட்சியின் திரு மா போ டானை 1984ஆம் ஆண்டு வீழ்த்தி பொத்தோங் பாசிர் தனித்தொகுதியைப் பிடித்தார்.
கணக்கியல் நிபுணரான திரு சித்தோ 2015ஆம் ஆண்டு வெற்றிகரமாக பொத்தோங் பாசிரில் வெற்றிப்பெற்றார்.
2015ஆம் ஆண்டு 66.39 விழுக்காட்டு வாக்குகளையும் 2022ஆம் ஆண்டு 60.67 விழுக்காட்டு வாக்குகளையும் திரு சித்தோ பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
“அரசியலில் நான் சேர்ந்தபோது என் மகளுக்கு ஒரு வயது. இப்போது என் பேத்திக்கு மூன்று வயது,” என்று வேடிக்கையாகச் சொன்ன திரு சித்தோ, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

