2026ஆம் ஆண்டில் ஆறு பொது விடுமுறைகளை முன்னிட்டு நீண்ட வார இறுதிகள் இருக்கும் என்று மனிதவள அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 16) தெரிவித்தது.
அடுத்த ஆண்டு மொத்தம் 11 பொது விடுமுறைகள் உள்ளன.
ஜனவரி 1 புத்தாண்டு வியாழக்கிழமையன்று வருகிறது.
ஏப்ரல் 3ஆம் தேதியன்று புனித வெள்ளி.
பொது விடுமுறையை முன்னிட்டு முதல் நீண்ட வார இறுதி புனித வெள்ளிக்கான விடுமுறையுடன் தொடங்குகிறது.
தொழிலாளர் தினமும் (மே 1), கிறிஸ்துமஸ் தினமும் (டிசம்பர் 25) வெள்ளிக்கிழமையன்று வருகிறது.
விசாக தினம் (மே 31), தேசிய தினம் (ஆகஸ்ட் 9) தீபாவளி (நவம்பர் 8) ஆகியவை ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது.
பொது விடுமுறை ஞாயிற்றுக்கிழமையன்று வரும்போது மறுநாள் திங்கட்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த ஆண்டு சீனப் புத்தாண்டு (பிப்ரவரி 17, 18) செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையன்று வருகிறது.
நோன்புப் பெருநாள் (மார்ச் 21) சனிக்கிழமையன்று வருகிறது.
ஹஜ்ஜுப் பெருநாள் (மே 27) புதன்கிழமையன்று வருகிறது.
2024ஆம் ஆண்டில் பொது விடுமுறையால் ஐந்து நீண்ட வார இறுதிகள் இருந்தன.
இவ்வாண்டு அது நான்காகக் குறைந்தது.
அடுத்த ஆண்டு அது ஆறாக அதிகரிக்கிறது.
பொது விடுமுறை நாள்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேலை நியமனச் சட்டத்தின்கீழ் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
அல்லது சம்பளத்துக்குப் பதிலாக, வேறொரு நாள் விடுமுறை கொடுக்கப்படலாம்.

