தற்போதைய கல்விமுறைக்கும் முன்பு இருந்த கல்விமுறைக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வயதானவர்களுக்கு வாய்ப்புகள் குறையலாம், அதை சரிசெய்து திறன்களை வளர்க்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவியாக இருக்கும் என்று கல்வியமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இளம் சிங்கப்பூரர்கள் தங்களுக்கு கிடைத்த மேம்பட்ட கல்வியால் பயனடைந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
“வயதான ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான மற்றும் தகுந்த திறன்களை வளர்க்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பாடத்திட்டங்கள் உதவும். மேலும் போட்டிமிக்க சூழலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் துணையாக இருக்கிறது,” என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் வரும் வேலைகளுக்கும் சிங்கப்பூரர்களின் திறன்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்கவும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு தரும். வாழ்நாள் கற்றலுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படும்,” என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது.
25 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவிநிதி உள்ளது. 40 வயதுகளில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம் திறன்களை வளர்க்க உதவியாக இருக்கும்.

