தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீஷான்வாசிகளின் தூக்கத்தைக் குலைக்கும் காகங்கள்

1 mins read
ef1ed65f-dbf5-4e0e-b8b6-c4debc23cd4c
பல ஆண்டுகளாக தாங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக பீஷான் குடியிருப்பாளர் ஒருவர் ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார். - படங்கள்: ஃபேஸ்புக்

தங்கள் அதிகாலைத் தூக்கத்தைக் கெடுக்கும் காகங்களின் சத்தத்தால் பீஷான் குடியிருப்பாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் ஆலிவர் வெங் என்று அழைக்கப்படும் பீஷான் குடியிருப்புவாசி ஒருவர், புளோக் 197 பிஷான் ஸ்திரீட் 13க்கு அருகே எடுக்கப்பட்ட காணொளிகளுடன் ‘கம்ப்ளைண்ட் சிங்கப்பூர்’ எனும் ஃபேஸ்புக் குழுவில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதன் மூலம், பீஷான்வாசிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

பின்னிரவு 1.30 மணிக்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் காணொளிகளில் காகங்கள் மரங்களின்மீது அமர்ந்தும் தொடர்ந்து கிளைகளுக்கு இடையே பறந்தும் உரத்த சத்தத்தை வெளியிடுவதைக் காண முடிந்தது.

ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், 200க்கும் மேற்பட்ட காகங்கள் இருப்பதாகவும் அவை எழுப்பும் சத்தம் இரு கும்பல்களுக்கு இடையே நடக்கும் சண்டை போல் இருப்பதாகவும் திரு வெங் கூறினார்.

பல ஆண்டுகளாக பீஷான்வாசிகள் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக பீஷான் குடியிருப்பாளர் ஒருவர் ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.

கார்பார்க்கில் உள்ள ஒவ்வொரு மரத்திலும் காகங்கள் காணப்படுகின்றன, அவை மனித இருப்பைப் பற்றிய கவனிப்பின்றி அலட்சியமாகத் தோன்றுகின்றன.

இந்தப் பிரச்சினை குறித்து அறிந்திருப்பதாகவும் நிலைமையைக் கண்காணிக்கவும் காகங்களின் கூடுகளை தேசிய பூங்காக் கழகம் அகற்றவும் பீஷான் - தோ பாயோ நகர மன்றத்துடன் இணைந்து செயல்படுகிறது.

கூடுகளை அகற்றி பறவைகளைப் பிடிப்பதன் மூலம் காகங்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்