சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 137ஆவது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) பிற்பகல் 4.00 மணிக்குத் தேசிய நூலகத்தில் நடைபெறவிருக்கிறது.
உள்ளூர்ப் படைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள நடைபெறும் நூல் கலந்துரையாடல் அங்கத்தில், எழுத்தாளர் திரு இராம வயிரவனின் ‘புன்னகைக்கும் இயந்திரங்கள்’ சிறுகதைத் தொகுப்பு இடம்பெறும்.
கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
டிசம்பர் மாத நூல் அறிமுகப் போட்டிக்குச் சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
சிறுகதைப் போட்டிக்கான உயர்நிலைப்பள்ளி மாணவர் பிரிவுக்கான தொடக்க வரி, ‘ஆண்டின் முடிவில் அது அவனுக்குக் கிடைத்த நற்செய்தியாக அமைந்தது’. மாணவர்கள் 200லிருந்து 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
இளையர் பிரிவுக்கான தொடக்க வரிகள் ‘சிங்கப்பூரில் எதிர்பார்க்காத நேரத்தில் மழை வருகிறது. இது காலநிலை மாற்றமா?’. இளையர்கள் 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
பொதுப்பிரிவுக்கான தொடக்க வரி ‘நள்ளிரவைத் தாண்டி நகர்ந்துகொண்டிருந்த காலவெளியில் அவனின் நினைவுகள் தறிகெட்டுப் பின்னோக்கி ஓடுகின்றன.’ சிறுகதை 400லிருந்து 500 சொற்களுக்குள் இருக்கவேண்டும்.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக நவம்பர் 21ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
தொடர்புடைய செய்திகள்
மேல் விவரங்களுக்குத் திருவாட்டி மணிமாலா மதியழகன் (8725 8701), திருவாட்டி பிரேமா மகாலிங்கம் (9169 6996) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.

