‘பீகல்’ என்ற வகையைச் சேர்ந்த உலகின் மிகப் பிரபலமான செல்ல நாய் வடிவம் இந்த விழாக்காலத்தில் மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தை அலங்கரிக்கவுள்ளது.
நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் மண்டாய் வனவிலங்குக் காப்பகத்திற்குச் செல்வோர் அங்கு ‘ஸ்னூப்பி’யையும் அதன் நண்பர்களின் வடிவங்களையும் கண்டு களிக்கலாம். அங்குச் செல்வோர் வனவிலங்கு வாழ்க்கை பற்றித் தெரிந்துகொள்வதுடன் பல விறுவிறுப்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். இவற்றுடன் பல அன்பளிப்பு முத்திரைகளையும் அவர்கள் பெறலாம்.
உலகெங்கும் ‘பீனட்ஸ்’ என்ற நகைச்சுவைத் துணுக்கு மூலம் 1974ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அறிமுகமானது ஸ்னூப்பி. அந்தக் கதாபாத்திரத்தின் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வனவிலங்குக் காப்பகத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ஸ்னூப்பி கதாபாத்திரத்துடன் அதற்குத் துணைபோகும் எட்டுப் பறவை வகைகளும் இடம்பெறும்.


